Home Tamil ஜப்பான் அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை இளையோர் அணி

ஜப்பான் அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை இளையோர் அணி

169

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இன்று (25) நடைபெற்ற ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை இளையோர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது

இலங்கை இளையோர் அணி தங்களுடைய முதல் இரண்டு குழுநிலை போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தோல்விகண்டு காலிறுதிக்கான வாய்ப்பை இழந்ததுடன், கேடயத்துக்கான போட்டிகளில் விளையாடி வருகின்றது.

புதிய கட்டமைப்புடன் 2022ஐ நோக்கி பயணிக்குமா இலங்கை U19 அணி?

ஐசிசி இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்…

இவ்வாறான நிலையில், தங்களுடைய குழுநிலையின் கடைசிப் போட்டியில் இன்றைய தினம் ஜப்பான் இளையோர் அணியை இலங்கை இளையோர் அணி எதிர்கொண்டது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஜப்பான் அணிக்கு வழங்கியது.

போட்டியை பொருத்தவரையில் ஆரம்பத்தில் மழைகுறுக்கிட்டதன் காரணமாக அணிக்கு தலா 22 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி, களமிறங்கிய ஜப்பான் அணி தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்து 43 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

ஜப்பான் அணியை பொருத்தவரை எந்தவொரு வீரரும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை என்பதுடன், இலங்கை இளையோர் அணியின் பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க, டிலும் சுதீர, கவிந்து நதீஷன், அஷேன் டேனியல் மற்றும் நவோத் பரணவிதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 8.3 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை இளையோர் அணி சார்பில் ரவிந்து ரஸந்த மற்றும் மொஹமட் சமாஸ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 19 மற்றும் 7 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, நவோத் பரணவிதான 9 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka U19
47/1 (8.3)

Japan U19
43/10 (18.3)

Batsmen R B 4s 6s SR
Marcus Thurgate b Dilshan Madusanka 0 1 0 0 0.00
Shu Noguchi b Dilum Sudheera 6 10 0 0 60.00
Neel Date b Dilshan Madusanka 6 11 1 0 54.55
Debashish Sahoo b Dilum Sudheera 9 12 0 0 75.00
Kazumasa Takahashi lbw b Ashian Daniel 2 14 0 0 14.29
Ishaan Fartyal run out (Chamindu Wijesinghe) 4 7 0 0 57.14
Ashley Thurgate c Ahan Wicrkamasinghe b Ashian Daniel 0 1 0 0 0.00
Kento Dobell c Chamindu Wijesinghe b Navod Paranavithana 7 19 0 0 36.84
Max Clements b Navod Paranavithana 6 18 0 0 33.33
Yugandhar Retharekar not out 0 9 0 0 0.00
Sora Ichiki run out (Navod Paranavithana) 1 9 0 0 11.11


Extras 2 (b 0 , lb 0 , nb 0, w 2, pen 0)
Total 43/10 (18.3 Overs, RR: 2.32)
Fall of Wickets 1-0 (0.1) Marcus Thurgate, 2-11 (2.5) Neel Date, 3-15 (3.5) Shu Noguchi, 4-25 (7.5) Debashish Sahoo, 5-25 (8.1) Kazumasa Takahashi, 6-25 (8.2) Ashley Thurgate, 7-32 (10.4) Ishaan Fartyal, 8-41 (14.4) Kento Dobell, 9-42 (16.3) Max Clements, 10-43 (18.3) Sora Ichiki,

Bowling O M R W Econ
Dilshan Madusanka 3 0 12 2 4.00
Dilum Sudheera 5 0 13 2 2.60
Ashian Daniel 5 1 11 2 2.20
Kavindu Nadeeshan 3 0 5 0 1.67
Navod Paranavithana 2.3 0 2 2 0.87


Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana b Kento Dobell 9 7 2 0 128.57
Mohammad Samaaz not out 7 20 0 0 35.00
Ravindu De Silva not out 19 25 3 0 76.00


Extras 12 (b 0 , lb 1 , nb 1, w 10, pen 0)
Total 47/1 (8.3 Overs, RR: 5.53)
Fall of Wickets 1-9 (1.1) Navod Paranavithana,

Bowling O M R W Econ
Yugandhar Retharekar 2 0 15 0 7.50
Kento Dobell 3 0 15 1 5.00
Max Clements 1 0 3 0 3.00
Sora Ichiki 1.3 0 7 0 5.38
Ashley Thurgate 1 0 6 0 6.00




முடிவு – இலங்கை இளையோர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<