யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இரண்டாவது வார போட்டியொன்றில் தொடரில் அறிமுக அணியான புனித ஹென்றியரசர் கல்லூரி அணியினை, உதைபந்தாட்டத்திற்கு பெயர்போன மற்றொரு பாடசாலையான ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி அணி எதிர் கொண்டிருந்தது. விறுவிறுப்பிற்கு குறைவில்லாது இடம்பெற்ற இந்த போட்டியில் இரண்டாவது பாதி கோல் மூலமாக போட்டியினை சமநிலையில் நிறைவுசெய்தது ஹென்றியரசர் கல்லூரி.
கிங்ஸ்வூட் கல்லூரியை இலகுவாக வென்றது யாழ் மத்திய கல்லூரி
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்…
இலங்கையின் முதல் தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இரண்டாவது முறையாகவும் ஏற்பாடு செய்து நடாத்தும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பாடசாலை அணிகளுக்கு இடையிலான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் கடந்த வாரம் ஆரம்பமாகியிருந்தது. இதில், நேற்று (11) யாழ்ப்பாணம் புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் குழு D இற்கான மிக முக்கிய போட்டியொன்று நிறைவிற்கு வந்தது.
கடந்த வாரம் மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி அணிக்கெதிரான போட்டியினை 02-02 என சமநிலையில் நிறைவு செய்த கடந்த வருட இறுதிப் போட்டியாளர்களான ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியினரை எதிர்த்து தமது சொந்த மைதானத்தில் தமது முதலாவது போட்டிக்காக களமிறங்கியிருந்தனர் புனித ஹென்றியரசர் கல்லூரியினர்.
போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் பந்தினை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹென்றியரசர் கல்லூரிக்கு 11 ஆவது நிமிடத்தில் மத்திய கோட்டிற்கு அருகில் ப்ரீ கிக் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ரெக்சன் உதைத்த அந்த பந்தினை சிறப்பான முறையில் சேகரித்த சப்ரின் அந்த முயற்சியினை தடுத்தார்.
போட்டியின் 21 ஆவது நிமிடத்தில் சப்ரான் கோலினை நோக்கி உதைத்த பந்து மயிரிழையில் கம்பத்திற்கு மேலால் செல்ல கொழும்பு தரப்பினரின் முதலாவது முயற்சி வீணானது. இருப்பினும் 27 ஆவது நிமிடத்தில் சர்பான் ஹமீடியா கல்லூரிக்காக முதலாவது கோலினை பெற்றுக்கொடுக்க, போட்டி மேலும் விறுவிறுப்படைந்தது
முதல் பாதி: ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி 01 – 00 புனித ஹென்றியரசர் கல்லூரி
இரண்டாவது பாதியின் முதல் நிமிடத்தில் ஹமீடியாவிற்கு கிடைத்த கோர்னர் கிக்கினை மொஹமட் அப்கர் ஹெடர் மூலம் உட்செலுத்த முயற்சித்த போதும் பந்து கம்பத்திற்கு சற்று உயர்வாக வெளியேறியது.
அடுத்த நிமிடத்திலேய யாழ் தரப்பிற்கு கிடைத்த ப்ரீ கிக்கினை ரெக்சன் உதைய முன்னேறி வந்த வேளை ச்பரின் அதனை தடுத்தார்.
இரண்டாவது பாதியில் ஆட்டம் மேலும் வேகமடைந்திருக்க, மீண்டுமொருமுறை ஹமீட் அல் ஹுசைனியின் கோல் பரப்பினை ஆக்கிரமித்த ஹென்றியரசர் கல்லூரி வீரர்கள் இம்முறை கோல் காப்பாளரை ஏமாற்றி பந்தினை எடுத்து சென்றபோதும் சிறப்பாக நிறைவு செய்ய தவறினர்.
கொழும்பு தரப்பிற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பொன்று கோலாக மாறும் சந்தர்ப்பம் பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியமையினால் நழுவியது.
போட்டியின் 70 ஆவது நிமிடத்தில் மத்திய கோட்டிற்கு அருகிலிருந்து பந்தினை ரெக்சன் முன் செலுத்த பந்தினை ஹெடர் மூலம் கோலாக மாற்றி கோல் கணக்கினை சமன் செய்தார் பிரசாந்த்.
புளூ ஸ்டாருக்கு புதிய தலைவர், பயிற்சியாளர் நியமனம்
இலங்கையின் முன்னணி கால்பந்து கழகங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற …
ஹமீட் அல் ஹுசைனியின் முன்கள வீரர்கள் எடுத்துச்சென்ற பந்தினை ஹென்றியரசரின் பின்கள வீரர்கள் போராடி வெளியேற்றினர்.
76 ஆவது நிமிடத்தில் மத்திய காலத்திற்கு அருகில் பந்து ஹமீடியா வீரரின் கைகளில் பட கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக்கினை ரெக்சன் வேகமாக கோலை நோக்கி உதைத்தார், அந்த முயற்சியினையும் சப்ரின் தடுத்தார்
மொஹமட் அப்கர் மிக சிறந்த முறையில் மத்திய களத்திலிருந்து பந்தினை எடுத்து சென்று கோர்னர் உதையினை பெற்று கொடுத்தார். அடுத்தடுத்து இரு கோர்னர் உதைகள் கிடைத்த போதும் ஹென்றியரசர் வீரர்கள் கோல் வாய்ப்பினை தடுத்தனர்.
போட்டியின் இறுதி நிமிடங்களில் இரு கல்லூரி வீரர்களும் பலத்த போராட்டத்தினை வெளிப்படுத்திய போதும் எவராலும் சாதகமான நிறைவினை மேற்கொள்ள முடியவில்லை.
முழு நேரம்: ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி 01 – 01 புனித ஹென்றியரசர் கல்லூரி
கோல் பெற்றவர்கள்
- ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி – சர்பான் 27′
- புனித ஹென்றியரசர் கல்லூரி- பிரசாந்த் 70′
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<