ஸாஹிராவுக்கு இலகு வெற்றி: நடப்புச் சம்பியனை சமன் செய்த றோயல் கல்லூரி

154

பாடசாலை அணிகளுக்கு இடையிலான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இரண்டாம் வாரத்திற்கான போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இரண்டாம் வாரத்தின் முதல் இரண்டு போட்டிகளினதும் முடிவுகள் இதோ… 

புனித ஜோசப் கல்லூரி எதிர் றோயல் கல்லூரி 

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் நடப்புச் சம்பியன்களாக உள்ள புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் றோயல் கல்லூரியை மொறகஸ்முல்ல ஜனக ரனவக்க மைதானத்தில் வியாழக்கிழமை (09) எதிர்கொண்டனர். 

பலம் மிக்க ஹமீட் அல் ஹுஸைனியை சமன் செய்தது பதுரியா

விறுவிறுப்போடு ஆரம்பமாகிய ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரின்…

போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் சிறந்த வாய்ப்புக்கள் பலவற்றை தவறவிட, குறித்த பாதி ஆட்டம் கோல்கள் எதுவம் இன்றி நிறைவடைந்தது.

இந்நிலையில், இரண்டாம் பாதி ஆரம்பமாகி 6 நிமிடங்களில் றோயல் கோல் எல்லையில் பந்தைப் பெற்ற காவிந்தய ரூபசிங்க சிறந்த முறையில் பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி, புனித ஜோசப் கல்லூரியை முன்னிலையடையச் செய்தார். 

அனுபவ வீரர்களைக் கொண்ட எதிரணிக்கு சரி சமமாக போராட்டம் கொடுக்கும் வகையில் ஆடிய றோயல் கல்லூரிக்கு 83 ஆவது நிமிடத்தில் 19 வயதின் கீழ் தேசிய அணி வீரர் செஷான் ப்ரபுத்த கோல் பெற்றுக் கொடுத்தார். மத்திய களத்தில் பந்தைப் பெற்ற அவர், நீண்ட தூரத்தில் இருந்து பந்தை வேகமாக உதைந்து கம்பங்களுக்குள் செலுத்தினார். அதுவே போட்டியின் சமநிலை கோலாக மாறியது.   

இந்த முடிவின் மூலம், றோயல் கல்லூரி ஒரு வெற்றி மற்றும் ஒரு சமநிலையான முடிவைப் பெற்றுள்ளது. புனித ஜோசப் வீரர்களுக்கு இது தொடரின் முதல் போட்டியாக இருந்தது.  

முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 1 – 1 றோயல் கல்லூரி

பங்கபந்து தங்க கிண்ண தொடருக்கான இலங்கை குழாமில் புதிய வீரர்கள்

பங்களாதேஷில் இந்த மாதம் 15ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள பங்கபந்து…

கொழும்பு ஸாஹிரா கல்லூரி எதிர் கேட்வே சர்வதேச பாடசாலை 

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக பங்குபற்றும் கேட்வே கல்லூரியின் கன்னிப் போட்டியாக அமைந்த இந்த மோதல் கொழும்பு ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்றது. 

தேசிய மற்றும் 19 வயதின் கீழ் தேசிய அணிகளில் உள்ள வீரர்களை அதிகமாகக் கொண்ட ஸாஹிரா கல்லூரிக்கு எதிரான இந்தப் போட்டியில் கேட்வே கல்லூரி வீரர்கள் போராட்டம் மிக்க ஒரு ஆட்டத்தைக் காண்பித்தனர்.  

போட்டியின் முதல் பாதியில் 3 – 0 என முன்னிலை வகித்த ஸாஹிரா வீரர்கள் போட்டி நிறைவில் 5-1 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றியை சுவைத்து சிறந்த முறையில் இந்த தொடரை ஆரம்பம் செய்தனர். 

ஸாஹிரா கல்லூரிக்காக மொஹமட் ஆகிப் மற்றும் மொஹமட் சாஜித் ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், சரீக் அஹமட் ஒரு கோலையும் பெற, கேட்வே கல்லூரிக்கான கோலை சமுனு கங்கோடாரச்சி பெற்றுக் கொடுத்தார். 

முழு நேரம்: கொழும்பு ஸாஹிரா கல்லூரி 5 – 1 கேட்வே கல்லூரி

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<