Home Tamil இலங்கை அணியை இலகுவாக வீழ்த்திய இந்திய அணி

இலங்கை அணியை இலகுவாக வீழ்த்திய இந்திய அணி

169
BCCI Twitter

இலங்கை அணிக்கு எதிராக இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று (7) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்தது.

வருடத்தின் முதல் வெற்றியை சுவைக்கப்போவது இலங்கையா? இந்தியாவா?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு…………….

இந்திய அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியின் வீரர்கள், தடுமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். ஆரம்பம் சிறப்பாக அமைந்த போதும், மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாடிய வீரர்கள் குறைந்த ஓட்ட வேகத்துடன் ஓட்டங்களை குவித்தனர்.

இதன் காரணமாக 20 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய போதும், இலங்கை அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. குசல் பெரேரா மாத்திரம் சற்று வேகமாக துடுப்பெடுத்தாடி 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 28 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அவிஷ்க பெர்னாண்டோ 22 ஓட்டங்கள், தனுஷ்க குணதிலக்க  20 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் ஆரம்பத்தை பெற்றிருந்த போதும், இறுதியாக களமிறங்கிய வனிந்து ஹசரங்க ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 16 ஓட்டங்களை பெற்றார். இந்திய அணியின் பந்துவீச்சில் சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, நவ்தீப் ஷைனி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

பின்னர், இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி லோகேஷ் ராஹுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் சிறப்பான ஆரம்பம் மற்றும் விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயரின் ஓட்டக்குவிப்பின் உதவியுடன் 17.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

லோகேஷ் ராஹுல் 45 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், லஹிரு குமார ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவரான இசுரு உதான உபாதை காரணமாக பந்துவீசவில்லை.

இந்த வெற்றியுடன் இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது. தொடரின் முதல் போட்டி மழை மற்றும் ஆடுகளத்தின் ஈரத்தன்மையால் கைவிடப்பட்டிருந்தது.

இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான T20 போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி பூனேவில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
142/9 (20)

India
144/3 (17.3)

Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka b Navdeep Saini 20 21 3 0 95.24
Avishka Fernando c Navdeep Saini b Washington Sundar 22 16 5 0 137.50
Kusal Perera c Shikhar Dhawan b Kuldeep Yadav 34 28 0 3 121.43
Oshada Fernando st Rishabh Pant b Kuldeep Yadav 10 9 1 0 111.11
Bhanuka Rajapakse c Rishab Pant b Navdeep Saini 9 12 1 0 75.00
Dasun Shanaka b Jasprit Bumrah 7 8 0 0 87.50
Dhananjaya de Silva c Navdeep Saini b Shardul Thakur 17 13 2 0 130.77
Wanindu Hasaranga not out 16 10 3 0 160.00
Isuru Udana c Navdeep Saini b Shardul Thakur 1 2 0 0 50.00
Lasith Malinga c Kuldeep Yadav b Shardul Thakur 0 1 0 0 0.00
Lahiru Kumara not out 0 0 0 0 0.00


Extras 6 (b 1 , lb 1 , nb 0, w 4, pen 0)
Total 142/9 (20 Overs, RR: 7.1)
Fall of Wickets 1-38 (4.5) Avishka Fernando, 2-54 (7.4) Danushka Gunathilaka, 3-82 (11.3) Oshada Fernando, 4-97 (13.2) Kusal Perera, 5-104 (14.5) Bhanuka Rajapakse, 6-117 (16.6) Dasun Shanaka, 7-128 (18.2) Dhananjaya de Silva, 8-130 (18.5) Isuru Udana, 9-130 (18.6) Lasith Malinga,

Bowling O M R W Econ
Jasprit Bumrah 4 0 32 1 8.00
Shardul Thakur 4 0 23 3 5.75
Navdeep Saini 4 0 18 2 4.50
Washington Sundar 4 0 29 1 7.25
Kuldeep Yadav 4 0 38 2 9.50


Batsmen R B 4s 6s SR
KL Rahul b Wanindu Hasaranga 45 32 6 0 140.62
Shikhar Dhawan lbw b Wanindu Hasaranga 32 29 2 0 110.34
Shreyas Iyer c Dasun Shanaka b Lahiru Kumara 34 26 3 1 130.77
Virat Kohli not out 30 17 1 2 176.47
Rishabh Pant not out 1 1 0 0 100.00


Extras 2 (b 1 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 144/3 (17.3 Overs, RR: 8.23)
Fall of Wickets 1-71 (9.1) KL Rahul, 2-86 (11.2) Shikhar Dhawan, 3-137 (17.1) Shreyas Iyer,

Bowling O M R W Econ
Lasith Malinga 4 0 41 0 10.25
Lahiru Kumara 3.3 0 30 1 9.09
Dhananjaya de Silva 2 0 15 0 7.50
Dasun Shanaka 4 0 26 0 6.50
Wanindu Hasaranga 4 0 30 2 7.50



முடிவு – இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<