டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்துள்ள நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை, அவ்வணியின் சிரேஷ்ட வீரர் ரொஸ் டெய்லர் படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (06) சிட்னியில் நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து வீரர் ரொஸ் டெய்லர் 22 ஓட்டங்களை எடுத்தார்.
நியூசிலாந்தை 3-0 என வைட்வொஷ் செய்த அவுஸ்திரேலியா!
சுற்றுலா நியூசிலாந்துக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் ………..
இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த நியூஸிலாந்து வீரர் என்ற ஸ்டீபன் பிளெமிங்கின் சாதனையை டெய்லர் முறியடித்துள்ளார்.
நியூஸிலாந்து அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீபன் பிளெமிங் 1994 முதல் 2008 வரை அந்த அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதில், அவர் 7,172 ஓட்டங்களைக் குவித்து நியூஸிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை வகித்து வந்தார். இந்நிலையில், ரொஸ் டெய்லர் அவரை பின் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ரொஸ் டெய்லர் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் 174 இன்னிங்ஸில் 7,174 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இவருடைய துடுப்பாட்ட சராசரி 46.28 ஆகும். இதில் 19 சதங்கள் மற்றும் 33 அரைச்சதங்கள் அடங்கும்.
U19 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
தென்னாபிரிக்காவில் இம்மாதம் 17ம் திகதி ……….
முன்னதாக, கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த நியூஸிலாந்து வீரர்கள் வரிசையில் இதேபோல் ஸ்டீபன் பிளெமிங்கைப் பின்னுக்குத் தள்ளி ரொஸ் டெய்லர் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் பிரெண்டன் மெக்கல்லம் (6,453 ஓட்டங்கள், சராசரி 38.64), கேன் வில்லியம்சன் (6379 ஓட்டங்கள், சராசரி 51.44), மார்டின் க்ரோவ் (5,444 ஓட்டங்கள், சராசரி 45.36) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
சாதனைப் படைத்த ரொஸ் டெய்லருக்கு பிளெமிங், மெக்கல்லம் உள்ளிட்டோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 35 வயதான ரொஸ் டெய்லர், தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கெதிராக எதிர்வரும் பெப்ரவரி மாதம் விளையாடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<