இலங்கை அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி பந்துவீச்சில் அசத்திய பாகிஸ்தான் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான நஷீம் ஷா, தென்னாபிரிக்காவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை (PCB) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, நஷீம் ஷாவுக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் வசீமை பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு கனிஷ்ட தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
நஷீம் ஷாவின் அபார பந்துவீச்சுடன் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
சுற்றுலா இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி..
தென்னாபிரிக்காவில் இம்மாதம் 17ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதில், கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான 16 வயதுடைய நஷீம் ஷாவும் இடம்பெற்றிருந்தார்.
எனினும், இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் நஷீம் ஷாவை பங்கேற்கச் செய்வதற்கு அந்நாட்டு தேசிய அணியின் தேர்வாளர்கள் விரும்பவில்லை.
ஆனாலும், உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சைப் பலப்படுத்தும் நோக்கில் நஷீம் ஷாவை அணியில் இணைத்துக் கொண்டதாக கனிஷ்ட அணி முகாமைத்துவம் அறிவித்திருந்தது.
இலங்கைக் கிரிக்கெட்: 2019 ஒரு மீள்பார்வை
நாம் பிரியாவிடை கொடுத்த 2019 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்..
அத்துடன், லாகூரில் கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணி வீரர்களுக்கான பயிற்சி முகாமிலும் நஷீம் ஷாவை இணைத்துக்கொள்ள கனஷ்ட தேர்வுக்குழு கடுமையான பிரயத்தனம் எடுத்தாலும், பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை கருத்திற்கொண்டு நஷீம் ஷாவை தொடர்ந்து சிரேஷ்ட அணியில் தக்கவைத்துக் கொள்ள பாகிஸ்தான் முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நிலையில், நஷீம் ஷாவை இம்முறை இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து விலக்கிக் கொள்வதற்கு அந்நாட்டு கனிஷ்ட தேர்வுக்குழு தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து நஷீம் ஷாவுக்குப் பதிலாக மொஹமட் வசீம் பாகிஸ்தான் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் இறுதியாக நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் கிண்ணத்தில் 3 விக்கெட்டுக்களையும், அதன்பிறகு நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான தொடரில் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.
பாக். வீரர் மொஹமட் ஹபீஸுக்கு இங்கிலாந்தில் பந்துவீச தடை
விதிமுறைக்கு மாறாக பந்துவீசிய புகாரில் பாகிஸ்தான் அணியின்..
இதுதொடர்பில் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியில் பயிற்சியாளர் இஜாஸ் அஹமட் கருத்து வெளியிடுகையில், “பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நஷீம் ஷா விளையாடுவதை நான் எதிர்க்க மாட்டேன்.
ஆனால் அந்தத் தொடர் நடைபெறாவிட்டால் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான குழாத்தில் அவரை இணைத்துக்கொள்ள விரும்புகிறேன” என தெரிவித்தார்.
2004 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் ஐ.சி.சியின் இளையோர் உலகக் கிண்ண சம்பியன் பட்டங்களை வென்ற பாகிஸ்தான் அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் C பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதில் ஜனவரி 19ஆம் திகதி ஸ்கொட்லாந்து அணியையும், 22ஆம் திகதி ஜிம்பாப்வே அணியையும், 24ஆம் திகதி பங்களாதேஷ் அணியையும் சந்திக்கவுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<