இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) நடத்தப்படும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான அழைப்பு ஒருநாள் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற சிலாபம் மேரியன்ஸ் மற்றும் NCC அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
NCC எதிர் இராணுவ கிரிக்கெட் கழகம்
தினேஷ் சந்திமாலின் தனித்த போராட்டத்தை முறியடித்து அதிரடி பந்துவீச்சு மூலம் இராணுவ கிரிக்கெட் கழகத்தை 22 ஓட்டங்களால் வீழ்த்திய NCC அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது.
இராணுவ கழகத்தை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற சந்திமால்
இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC)…..
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த NCC அணி 68 ஓட்டங்களை பெறுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் மத்திய பின்வரிசையில் அணித்தலைவர் அஞ்செலோ பெரேரா (45) மற்றும் சஹான் ஆரச்சிகேவின் (56) நிதான ஆட்டத்தின் மூலம் NCC அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இராணுவ கழகமும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் மத்திய வரிசையில் வந்த தினேஷ் சந்திமால் ஒருமுனையில் சிறப்பாக ஆடியபோதும் மறுமுனை வீரர்கள் கைகொடுக்க தவறினர். இதனால் இராணுவ கழகம் 42.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
Photos: NCC Vs Army SC – SLC Invitation Limited Over Tournament 2019-20 | SF 2
சந்திமால் 109 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 91 ஓட்டங்களை பெற்றார்.
NCC அணி சார்பில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் திலேஷ் குணரத்ன மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சச்சிந்து கொலம்பகே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
NCC – 194 (49.3) – சஹான் ஆரச்சிகே 56, அஞ்செலோ பெரேரா 45, சாமிக்க கருணாரத்ன 24, ஜனித் சில்வா 3/20, ஹேஷான் ஹொட்டியாரச்சி 3/34, துஷான் விமுக்தி 2/32, அசேல குணரத்ன 2/34
இராணுவ கிரிக்கெட் கழகம் – 172 (42.1) – தினேஷ் சந்திமால் 91*, டிலேஷ் குணரத்ன 3/18, ச்சிந்து கொலம்பகே 3/54
முடிவு – NCC கழகம் 22 ஓட்டங்களால் வெற்றி
SSC எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்
இந்தியாவில் பிறந்த சுமித் காதிகோன்கரின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் SSC அணிக்கு எதிரான அழைப்பு ஒருநாள் தொடரின் அரையிறுதியில் சிலாபம் மேரியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. காதிகோன்கர் அடுத்தடுத்து தனது இரண்டாவது சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டார்.
கட்டுநாயக்கவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட SSC அணியின் முன் வரிசை வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கொடி 57 ஓட்டங்களை பெற்றதோடு சகலதுறை வீரர் சச்சித்ர சேனநாயக்க முதல் வரிசையில் அதிரடியாக 88 பந்துகளில் 86 ஓட்டங்களை விளாசினார். அதேபோன்று ஷம்மு அஷான் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றார்.
நான்கு ஆண்டுகளுக்குப்பின் இலங்கை அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துடன் இலங்கை…..
இதன் மூலம் SSC அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிலாபம் மேரியன்ஸ் சார்பில் காதிகோன்கர் சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொடுத்தார். 111 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 14 பௌண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 99 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஹிமேஷ் ராமனாயக்கவின் பந்துக்கு LBW முறையில் ஆட்டமிழந்தார்.
சனிக்கிழமை நடந்த காலிறுதிப் போட்டியில் அறிமுகமாகிய காதிகோன்கர் 100 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Photos: SSC Vs Chilaw MCC | SF 1 | SLC Invitation Limited Over Tournament 2019-20
மத்திய வரிசையில் அணித்தலைவர் ஷெஹான் ஜயசூரிய (57) கைகொடுக்க சிலாபம் மேரியன்ஸ் அணி 46.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதன்படி சிலாபம் மேரியன்ஸ் மற்றும் NCC அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (31) SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.
SSC – 277/8 (50) – சச்சித்ர சேனநாயக்க 86, ஷம்மு அஷான் 71*, சந்துன் வீரக்கொடி 57, ஷெஹான் ஜயசூரிய 2/20, திக்ஷில டி சில்வா 2/51
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 279/7 (46.4) – சுமித் காதிகோன்கர் 99, ஷெஹான் ஜயசூரிய 57, திக்ஷில டி சில்வா 31, தம்மிக்க பிரசாத் 3/62, ஹிமேஷ் ராமனாயக்க 2/48
முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<