நீர்கொழும்பு அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த டில்ஷான் முனவீர

204

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் அழைப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (18) நடைபெற்ற போட்டியில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழக அணி 89 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இதில் நீர்கொழும்பு கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இலங்கை அணியின் அனுபவமிக்க துடுப்பாட்ட சகலதுறை வீரரான டில்ஷான் முனவீர துடுப்பாட்டத்தில் 49 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்

அத்துடன், அஷேன் சில்வா (74), மாதவ வர்ணபுர (69) மற்றும் ரொஸ்கோ தட்டில் (52) ஆகியோர் அரைச்சதங்களை குவித்தனர்.

குழுவுக்காக நடைபெற்ற இப்போட்டியானது நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் பதுரெலிய விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் கட்டுநாயக்கவில் நடைபெற்றது.

போட்டியின் நாயண சுழற்சியில் வென்ற பதுரெலிய கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றது.

பதுரெலிய அணியின் பந்துவீச்சில் லஹிரு சமரகோன் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அலங்கார அசலங்க சில்வா 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்

பின்னர், 286 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பதுரெலிய கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் 72 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிது.

எனினும், பின்வரிசை வீரர்களாகக் களமிறங்கி பதுரெலிய அணிக்காக அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் மாலி (52) மற்றும் துஷான் ஹேமன்த (51) அரைச் சதமடித்து வெற்றிக்காக போராடியபோதும் அந்த அணியால் 38.2 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைய முடியவில்லை

இறுதியில் அந்த அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க நீர்கொழும்பு கிரிக்கெட் அணி 89 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

பதுரெலிய அணிக்காக பந்துவீச்சில் சஹன் அதீஷ 3 விக்கெட்டுக்களையும், டில்ஷான் முனவீர 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்

போட்டியின் சுருக்கம் 

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 258/8 (50) :அஷேன் சில்வா 74, மாதவ வர்ணபுர 69, ரொஸ்கோ தட்டில் 52, டில்ஷான் முனவீர 49, அசலங்க சில்வா 2/39, வைபவ் மாலி 2/55

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 196 (38.2): வைபவ் மாலி 52, துஷான் ஹேமன்த 51, டில்ஷான் முனவீர 4/24,  சஹன் அதீஷ 3/52

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 89 ஓட்டங்களால் வெற்றி 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க