இலங்கை அணியில் இருந்து விலகும் சுரங்க லக்மால்

186

டெங்கு நோயின் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான சுரங்க லக்மால், பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணியில் இருந்து விலகியிருக்கின்றார்.

பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வாரம் முதல் (புதன்கிழமை முதல்) அங்கே ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கின்றது. இத்தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை அணியில் முதன்மை வேகப்பந்துவீச்சாளராக இருந்த சுரங்க லக்மால் இடம்பெற்றிருந்ததோடு, கடைசியாக 2009 ஆம் ஆண்டில் டெஸ்ட் தொடர் ஒன்றுக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி வீரராகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PSL 2020: லாஹூர் அணியில் இலங்கை சீக்குகே பிரசன்ன

அடுத்த வருடம் (2020) நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) கிரிக்கெட்…

இந்நிலையில் தற்போது டெங்கு காரணமாக சுரங்க லக்மால் இல்லாமல் போயிருக்கும் விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

“அவர் (லக்மால்) டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால் இலங்கை அணியுடனும் பயணிக்கமாட்டார்.” 

லக்மால் இல்லாமல் போயிருக்கும் காரணத்தினால் இலங்கை டெஸ்ட் அணியில் 22 வயது நிரம்பிய வேகப்பந்துவீச்சாளரான அசித்த பெர்னாந்துவிற்கு வாய்ப்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணிக்காக முன்னர் ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் மாத்திரம் விளையாடியிருக்கும் அசித்த பெர்னாந்து இலங்கை A கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்காக அண்மையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<