SAG 4×100 அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு இரட்டைத் தங்கம்

233

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா 6ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றதுடன், இலங்கை வீரர்கள் பங்கேற்கும் மெய்வல்லுனர் போட்டிகள் இன்றைய தினம் (13) இடம்பெற்றன.  

SAG – முப்பாய்ச்சலில் பதக்கம் வென்ற சப்ரின் : இலங்கைக்கு மேலும் 4 தங்கங்கள்

தெற்காசிய விளையாட்டு விழாவின் (SAG) மெய்வல்லுனர் ………..

மெய்வல்லுனர் போட்டிகளின் நான்காவது நாளான இன்று காலை ஆண்களுக்கான 4x100 அஞ்சலோட்ட இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணி, 39.14 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து, புதிய தெற்காசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டது.

முன்னதாக, 2004ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 9ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இந்திய அணி நிலைநாட்டிய (39.91 செக்.) சாதனையை 15 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணி முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

தெற்காசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அஞ்சலோட்ட அணியில் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா 100 மீற்றரில் வெள்ளிப்பதக்கம் ஹிமாஷ ஷான், ஆண்களுக்கான 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்ற வினோஜ் சுரன்ஜய ஆகிய இருவருடன், யுபுன் ப்ரியதர்ஷன, சானுக்க சந்தீப ஆகிய இருவரும் இடம்பிடித்திருந்தனர்

இதேநேரம், ஆண்களுக்கான 4x100 அஞ்சலோட்டத்தில் 39.97 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தையும், பாகிஸ்தான் அணி (40.5 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது

இதுஇவ்வாறிருக்க, பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டத்தில் லக்ஷிகா சுகன்தி தலைமையிலான இளம் பெண்கள் அணி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது. போட்டியை நிறைவுசெய்ய 44.89 செக்கன்களை எடுத்துக் கொண்டனர்

SAG 10,000 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சண்முகேஸ்வரன்

தெற்காசிய விளையாட்டுப் விழா (SAG) மெய்வல்லுனர் ……….

நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டம், பெண்களுக்கான 100 மீற்றரில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற லக்ஷிகா சுகன்தி இலங்கை அஞ்சலோட்ட அணியின் தலைவியாக செயற்பட்டதுடன், பெண்களுக்கான 100 மீற்றரில் வெண்கலம் வென்ற அமாஷா டி சில்வா, பெண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கம் சாரங்கி சில்வா மற்றும் 17 வயதான பாடசாலை மாணவியான சந்தீப ஹெண்டர்சன் உள்ளிட்ட வீராங்கனைகள் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தனர்

இதேநேரம், பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டத்தில் 45.36 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தையும், பாகிஸ்தான் அணி (46.74 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது.  

முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 4x100 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க<<