தெற்காசிய விளையாட்டுப் விழா (SAG) மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை நிலானி ரத்நாயக்க பெற்றுக் கொடுத்தார்.
13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நோபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்காரா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றது
போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (03) காலை இலங்கைக்கு அதிகளவான பதக்கங்களை பெற்றுக் கொடுக்கின்ற போட்டி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் கத்மண்டுவில் உள்ள தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
SAG இல் பாலுராஜுக்கு முதல் பதக்கம் : ரனுக மூலம் இலங்கைக்கு முதல் தங்கம்
நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற ………
இதில், 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனான இவர், இலங்கை மெய்வல்லுனர் அணியின் தலைவியாக நியமிக்கப்பட்டிருந்த நிமாலி லியனாஆரச்சிக்குப் பதிலாக ஓடி இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில், ஆண்களுக்கான 100 மீற்றரில் தெற்காசியாவின் அதிவேக வீரராக கடந்த 3 வருடங்களாக வலம்வந்த இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் ஹிமாஷ ஏஷான் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்டார்.
நிலானிக்கு தங்கம்
இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நிலானி ரத்னாயக்க தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியை நிறைவு செய்ய 4 நிமிடங்கள் 34.34 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.
இதேநேரம், 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் முன்னாள் தேசிய சம்பியனும், ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியனுமான கயன்திகா அபேரத்ன, 4ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.
Photos: Day 3 | South Asian Games 2019
இதுஇவ்வாறிருக்க, ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குபுன் குசாந்த 5ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். இவர் இறுதியாக 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இந்த நிலையில், குபுன் குஷாந்தவுடன் போட்டியிட்ட மற்றுமொரு இலங்கை வீரரான சன்ஜீவ லக்மால் 4ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஹிமாஷவுக்கு வெள்ளிப் பதக்கம்
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிச் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகள் இன்று (22) காலை நடைபெற்றன. இதில் இலங்கை சார்பாக ஹிமாஷ ஏஷான் மற்றும் வினோஜ் சுரன்ஜய டி சில்வா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இதில் தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவரும், தெற்காசியாவின் நடப்பு அதிவேக வீரருமான ஹிமாஷ ஏஷான், ஒரு மில்லி செக்கனில் தங்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன்படி, போட்டித் தூரத்தை 10.49 செக்கன்களில் நிறைவுசெய்த மாலைத்தீவின் சைட் ஹசன் தங்கப் பதக்கத்தை வென்று தெற்காசியாவின் அதிவேக வீரராகத் தெரிவாகியதுடன், அவருக்கு பலத்த போட்டியைக் கொடுத்த ஹிமாஷ ஏஷான் 10.50 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதேநேரம், போட்டியை 10.66 செக்கன்களில் நிறைவுசெய்த பாகிஸ்தான் வீரர் சமிஉல்லாஹ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதேவேளை, ஹிமாஷவுடன் குறித்த போட்டியில் களமிறங்கிய வினோஜ் சுரன்ஜய டி சில்வா 6ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
SAG 2019 கால்பந்து: மாலைத்தீவை சமன் செய்தது இலங்கை
தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) இலங்கை கால்பந்து அணி, தாம் பங்கு கொண்ட ……..
லக்ஷிகாவின் அதிசிறந்த நேரப் பெறுமதி
பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் லக்ஷிகா சுகன்தி மற்றும் அமாஷா டி சில்வா ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
ஏழு அம்சப் போட்டிகளின் தேசிய சம்பியனான லக்ஷிகா சுகன்தி, 11.82 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், தனது அதிசிறந்த நேரத்தையும் பதிவு செய்தார்.
எனினும், இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் அர்ச்சனா சுசேன்த், போட்டியை 11.80 செக்கன்களில் நிறைவு செய்ததுடன், 2 மில்லி செக்கன்களினால் தங்கம் வெல்லும் வாய்ப்பை லக்ஷிகா சுகன்தி தவறிவிட்டார்.
இதுஇவ்வாறிருக்க, அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற அமாஷா டி சில்வா முதலிரண்டு இடங்களைப் பெற்றுக் கொண்ட வீராங்கனைகளுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்ததுடன், போட்டித் தூரத்தை 11.84 நிறைவு செய்து தனது அதிசிறந்த காலத்தைப் பதிவு செய்தார்.
துலாஞ்சலிக்கு வெள்ளிப் பதக்கம்
பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட துலாஞ்சலி ரணசிங்க வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியில் அவர் 1.69 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்தார்.
Photos: Day 02 | South Asian Games 2019
இதேநேரம், குறித்த போட்டியில் இந்திய வீராங்கனைகளான திஸ்னம் 1.73 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தையும், ருபினா யாதவ் வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தனர்.
ஹிருனியை வீழ்த்திய நிலன்தி
பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா வாழ் இலங்கை வீராங்கனையான ஹிருனி விஜேரத்ன 4ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற ஹிருனிக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த நிலன்தி லங்கா ஆரியதாஸ வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். போட்டியை அவர் 35 நிமிடங்கள் 59.02 செக்கன்களில் நிறைவு செய்தார்.
இந்த நிலையில், நேபாளத்தின் சந்தோசி ஸ்ரெஸ்ட் (37 மணி. 07.94 செக்) தங்கப் பதக்கத்தையும், இந்தியாவின் கவிதா யாதவ் (37 மணி. 07.95 செக்) வெள்ளிப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.
இதன்படி, இன்று (03) நிறைவுக்கு வந்த மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளில் இலங்கை அணி ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தது.
இதுவரையிலான மொத்த முடிவு
நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
நேபாளம் | 19 | 5 | 9 | 33 |
இந்தியா | 10 | 12 | 5 | 27 |
,yq;if | 5 | 13 | 20 | 38 |
பாகிஸ்தான் | 2 | 5 | 8 | 15 |
பங்களாதேஷ் | 1 | 3 | 19 | 23 |
மாலைதீவுகள்; | 1 | 0 | 1 | 1 |
பூட்டான் | 0 | 0 | 1 | 1 |
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<