தேசிய மட்ட முப்பாய்ச்சல் போட்டியில் கடந்த 8 வருடங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்ற தென்னிலங்கயைச் சேர்ந்த ஒரேயொரு தமிழ் பேசுகின்ற வீரரான சப்ரின் அஹமட், முப்பாய்ச்சல் போட்டிகளின் தேசிய சம்பியனாக இம்முறை நேபாளத்தில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளார். சப்ரின் அஹமட்டின் வெற்றிப் பயணம் குறித்த காணொளியை இங்கு பார்க்கலாம்.