மூன்றாவது பருவகாலத்திற்கான T10 லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மராத்தா அரபியன்ஸ் அணி, டெக்கான் கிளேடியட்டர்ஸ் வீரர்களை 8 விக்கெட்டுக்களால் இலகுவாக வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.
T10 லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியானது ஞாயிற்றுக்கிழமை (24) அபுதாபி ஷேக் ஷெயத் மைதானத்தில் நடைபெற்றது.
T10 லீக் இறுதிப் போட்டியில் மராத்தா அரபியன்ஸ், டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிகள்
T10 லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஒப் சுற்று அபுதாபி …….
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மராத்தா அரபியன்ஸ் அணியின் தலைவர் கிறிஸ் லின் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை, ஷேன் வொட்சன் தலைமையிலான டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு வழங்கினார்.
இதன்படி முதலில் துடுப்பாடிய டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணி 10 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றது.
டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆசிப் கான் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்கள் எடுக்க, பானுக்க ராஜபக்ஷ 12 பந்துகளில் 23 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இதேநேரம் மராத்தா அரபியன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ட்வேய்ன் பிராவோ 2 விக்கெட்டுக்களையும், லசித் மாலிங்க, கசுன் ராஜித மற்றும் மிச்செல் மெக்லனகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.
பின்னர் மிகவும் சவால் குறைந்த போட்டியின் வெற்றி இலக்கான 88 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மராத்தா அரபியன்ஸ் அணி குறித்த வெற்றி இலக்கை 7.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 89 ஓட்டங்களுடன் அடைந்தது.
மராத்தா அரபியன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவிய மேற்கிந்திய தீவுகள் அணியின் சட்விக் வால்டன் அரைச்சதம் பூர்த்தி செய்து 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றார்.
இதேநேரம், டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக மிகேல் ப்ரேடெரியஸ் மற்றும் ஸஹீர் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக மராத்தா அரபியன்ஸ் அணியின் சட்விக் வால்டன் தெரிவு செய்யப்பட, தொடர் நாயகன் விருதினை மராத்தா அரபியன்ஸ் அணியின் தலைவர் கிறிஸ் லின் வென்றார்.
போட்டியின் சுருக்கம்
டெக்கான் கிளேடியேட்டர்ஸ் – 87/8 (10) ஆசிப் கான் 25(17)*, பானுக்க ராஜபக்ஷ 23(12), ட்வேய்ன் ப்ராவோ 16/2(2), மிச்செல் மெக்லனகன் 12/1(2), கசுன் ராஜித 15/1(2), லசித் மாலிங்க 18/1(2)
மராத்தா அரபியன்ஸ் – 89/2(7.2) சட்விக் வால்டன் 51(26), மிகெல் ப்ரெடொரியஸ் 16/1(2)
முடிவு – மராத்தா அரபியன்ஸ் 8 விக்கெட்டுக்களால் வெற்றி
மூன்றாம் இடத்திற்கான போட்டி
தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் திசர பெரேரா தலைமையிலான பங்ளா டைகர்ஸ் அணி, கலந்தர்ஸ் வீரர்களை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
கலந்தர்ஸ் – 109/3 (10) பிலிப் சால்ட் 30(15)*, பிரபாத் ஜயசூரிய 14/2(2), கெவின் கொத்திகொட 29/1(2)
பங்ளா டைகர்ஸ் – 113/4 (9.4) அன்ட்ரூ பிளச்சர் 52(30), ரில்லி ரூசோ 31(15)
முடிவு – பங்ளா டைகர்ஸ் 6 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<