Home Tamil சதீர, தனஞ்சய டி சில்வாவின் அதிரடிக்கு ஏமாற்றம் கொடுத்த சீரற்ற காலநிலை

சதீர, தனஞ்சய டி சில்வாவின் அதிரடிக்கு ஏமாற்றம் கொடுத்த சீரற்ற காலநிலை

188

வர்த்தக நிறுவனங்கள் சங்கத்தினால் 27ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்ப்பட்ட சிங்கர் – MCA ப்ரீமியர் (நொக் அவுட்) ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி சீரற்ற மழையினால் முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டது.

இதன் காரணமாக வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27ஆவது சிங்கர் – MCA ப்ரீமியர் (நொக் அவுட்) ஒருநாள் தொடரின் இணை சம்பியன்களாக டில்ருவன் பெரேரா தலைமையிலான மாஸ் யுனிச்செல்லா அணியும், லக்ஷான் ரொட்ரிகோ தலைமையிலான LB பினான்ஸ் அணியும் தெரிவாகின.

டில்ஷானின் சகோதரர் சம்பத்தின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியீட்டிய மாஸ் யுனிச்செல்லா

டில்ருவன் பெரேரா மற்றும் லஹிரு மதுஷங்கவின் அபார பந்துவீச்சு மற்றும்…

கடந்த மாதம் ஏழு அணிகளின் பங்கேற்போடு ஆரம்பமான இந்த தொடரின் இறுதிப் போட்டி LB பினான்ஸ் மற்றும் மாஸ் யுனிச்செல்லா அணிகளுக்கிடையில் இன்று (23) கொழும்பு MCA மைதானத்தில் நடைபெற்றது.

சீரற்ற காலநிலை காரணமாக அணிக்கு 37 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டில்ருவன் பெரேரா தலைமையிலான மாஸ் ஹோல்டிங்ஸ் யுனிச்செல்லா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி மாஸ் யுனிச்செல்லா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய லக்ஷான் ரொட்ரிகோ மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் சிறந்ததொரு ஆரம்ப துடுப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர்.

இருவரும் 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, லக்ஷான் ரொட்ரிகோ 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

Photos: LB Finance vs MAS Unichela | 27th Singer-MCA Premier League 2020 – Knock-Out stage – Finals

இவரது ஆட்டமிழப்புக்கு பின்னர் சதீர சமரவிக்ரமவுடன் ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வா நிதானமாக ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டு மாஸ் யுனிச்செல்லா அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். எனினும், திலகரத்ன டில்ஷானின் பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா (59), ப்ரியமால் பெரேராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரது ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய அஞ்செலோ பெரேரா (18), சரித் அசலங்க (25) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றாலும்,  ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கை கொடுத்தார்.

இறுதியில் அந்த அணி, 37 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை எடுத்தது.

மாஸ் யுனிச்செல்லா அணியின் பந்து வீச்சில் லஹிரு ஜயரத்ன 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, லஹிரு மதுஷங்க, டில்ருவன் பெரேரா, டி.எம் டில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர். 

இதன் பின்னர் டக்த் லூவிஸ் முறைப்படி போட்டியின் வெற்றி இலக்காக 279 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. 

இதன்படி, களமிறங்கிய மாஸ் யுனிச்செல்லா அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. குசல் ஜனித் பெரேரா 4, திலகரத்ன டில்ஷான் 15 மற்றும் திலகரத்ன் சம்பத் 13 ஓட்டங்களுடன் வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய ப்ரியமால் பெரேரா (12), மஹேல உடவத்த (22), கமிந்து மெண்டிஸ் (6) ஓட்டங்களை எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க அவ்வணி மேலும் தடுமாற்றம் கண்டது.

இதன்படி, LB பினான்ஸ் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானத்தில் நிலவிய போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. 

தொடர்ந்து போட்டிக்கு மழையின் குறுக்கீடு ஏற்பட்டதோடு, நீண்ட நேரம் நிலைமைகள் எதுவும் சீராகாத காரணத்தினால் ஆட்டமும் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளும் இணை சம்பியன்களாக அறிவிக்கப்பட்டன. 

இதற்கு முன் 2012, 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மாஸ் யுனிச்செல்லா அணி ஒருநாள் சம்பியன் பட்டத்தை வென்றிருந்ததுடன், இம்முறை லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத அணியாக இறுதிப் போட்டிக்கு வந்த LB பினான்ஸ் அணி இதுவரை சம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. 

லக்ஷான் ரொட்ரிகோ அபாரம்: இறுதிப் போட்டியில் எல்.பி பினான்ஸ் அணி

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது…

எனினும், 2017/2018 பருவகாலத்தில் லசித் மாலிங்க தலைமையிலான டி.ஜே லங்கா அணியுடனான இறுதிப் போட்டியில் LB பினான்ஸ் அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சுமார் ஒரு மாதங்களாக நடைபெற்று வந்த இந்தத் தொடரின் சிறந்த வீரராக காலி அணியின் ரமேஷ் மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டதோடு, சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது மாஸ் யுனிச்செல்லா அணியின் கமிந்து மெண்டிஸிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. தொடரின் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதினை சம்பத் வங்கி அணியின் மலிந்த புஷ்பகுமார வென்றிருந்தார்.

ஸ்கோர் விபரம்

Result


LB Finance
259/7 (37)

MAS Holdings – Unichela
109/6 (15)

Batsmen R B 4s 6s SR
Lakshan Rodrigo c T. M. Sampath b Lahiru Jayaratne 45 19 6 3 236.84
Sadeera Samarawickrama not out 97 97 5 3 100.00
Kusal Mendis c T. M. Sampath b Lahiru Jayaratne 5 11 0 0 45.45
Dhanajaya de Silva c Priyamal Perera b T M Dilshan 59 65 1 0 90.77
Angelo Perera c Priyamal Perera b Dilruwan Perera 18 13 2 1 138.46
Charith Asalanka c Priyamal Perera b Lahiru Madushanka 25 16 1 2 156.25
Shiran Fernando run out (Lahiru Madushanka) 0 1 0 0 0.00
Ashen Bandara run out (T. M. Sampath) 1 2 0 0 50.00


Extras 9 (b 0 , lb 0 , nb 1, w 8, pen 0)
Total 259/7 (37 Overs, RR: 7)
Fall of Wickets 1-62 (5.1) Lakshan Rodrigo, 2-80 (9.4) Kusal Mendis, 3-181 (27.2) Dhanajaya de Silva, 4-212 (31.3) Angelo Perera, 5-254 (36.1) Charith Asalanka, 6-254 (36.2) Shiran Fernando, 7-259 (36.6) Ashen Bandara,

Bowling O M R W Econ
Lahiru Madushanka 8 0 68 1 8.50
Lahiru Jayaratne 7 0 47 2 6.71
Nipun Ransika 6 0 57 0 9.50
Kamindu Mendis 5 0 29 0 5.80
Dilruwan Perera 6 0 40 1 6.67
T M Dilshan 5 0 18 1 3.60


Batsmen R B 4s 6s SR
T. M. Sampath c Charith Asalanka b Dhanajaya de Silva 13 10 0 2 130.00
Kusal Janith b Shiran Fernando 4 3 1 0 133.33
T M Dilshan c Lahiru Udara b Shiran Fernando 15 9 3 0 166.67
Mahela Udawatte st Sadeera Samarawickrama b Kavika Dilshan 22 18 2 1 122.22
Priyamal Perera b Charith Asalanka 12 14 0 1 85.71
Chamara Silva not out 25 25 1 1 100.00
Kamindu Mendis c Shiran Fernando b Kavika Dilshan 6 12 0 0 50.00
Lahiru Madushanka not out 1 2 0 0 50.00


Extras 11 (b 0 , lb 5 , nb 3, w 3, pen 0)
Total 109/6 (15 Overs, RR: 7.27)
Fall of Wickets 1-7 (0.4) Kusal Janith, 2-24 (2.2) T M Dilshan, 3-41 (3.2) T. M. Sampath, 4-67 (6.6) Priyamal Perera, 5-88 (10.5) Mahela Udawatte, 6-105 (14.1) Kamindu Mendis,

Bowling O M R W Econ
Shiran Fernando 3 0 44 2 14.67
Chathuranga Kumara 1 0 7 0 7.00
Dhanajaya de Silva 6 0 29 1 4.83
Charith Asalanka 1 0 5 1 5.00
Kavika Dilshan 4 0 17 2 4.25



>>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<