பங்கபந்து பி.பி.எல் T20 தொடரில் ஐந்து இலங்கையர்கள்

235

இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பங்கபந்து பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) T20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த  ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றிருந்தது.

சரித் அசலங்கவின் சதம் வீண்: ஆப்கானிடம் வீழ்ந்தது இலங்கை

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் …….

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) ஏற்பாடு செய்து நடாத்தும் இந்த பங்கபந்து பி.பி.எல் T20 கிரிக்கெட் தொடரில் 7 அணிகள் பங்குபெறுகின்றன. பங்கபந்து பி.பி.எல் T20 தொடர், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஏற்கனவே  நடாத்திய பி.பி.எல் T20 கிரிக்கெட் தொடர்களை விட வித்தியாசமான முறையில் நடைபெறவிருக்கின்றமை முக்கிய அம்சமாகும். இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 439 வெளிநாட்டு வீரர்கள் அடங்கலாக மொத்தமாக 620 கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். 

எனினும் வீரர்கள் ஏலத்தில் வெறும் 33 வெளிநாட்டு வீரர்களே தொடரில் பங்கெடுக்கும் 7 அணிகளினாலும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளனர். அதில் இலங்கையைச் சேர்ந்த 5 கிரிக்கெட் வீரர்கள் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.  

இந்த இலங்கையர்களில் தசுன் ஷானக்க மற்றும் குசல் பெரேரா போன்ற அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் கொமில்லா வோரியர்ஸ் அணிக்காக ஆடவிருக்கின்றனர்.  

அதேநேரம், 21 வயது நிரம்பிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாந்து சட்டொக்ரம் சேலஞ்சர்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றார். அவிஷ்க பெர்னாந்து சட்டொக்ரம் சேலஞ்சர்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்ட மற்றுமொரு வீரரான கிறிஸ் கெயிலுடன் இணைந்து பங்கபந்து பி.பி.எல் T20 தொடரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை, ஏற்கனவே இடம்பெற்ற பி.பி.எல் T20 தொடர்களில் ஆடிய அனுபவத்தினைக் கொண்டிருக்கும் இலங்கை T20 அணியின் முன்னாள் தலைவரான திசர பெரேரா, டாக்கா பிளாட்டூன் அணிக்காக ஆடவிருக்கின்றார். சுழல்பந்து சகலதுறை வீரரான ஜீவன் மெண்டிஸ் சில்லட் தன்டர்ஸ் அணிக்காக விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<