பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மொமினுல் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் படைத்துள்ளார்.
மேலும், முத்தையா முரளிதரனுடன் ஒரு சாதனைப் பட்டியலில் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பஞ்சாப் அணியிலிருந்து விடைபெறும் அஸ்வின்!
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் கிங்ஸ் லெவன்…….
இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 150 ஓட்டஙகளுக்கு சுருண்டது.
இதன்போது இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதில் முதல் விக்கெட்டாக மொமினுல் ஹக்கை போல்ட் முறை மூலம் அஷ்வின் வீழ்த்தினார். இது அஷ்வினுக்கு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட்டில் கைப்பற்றிய 250 ஆவது விக்கெட்டாகும்.
இந்த விக்கெட்டுக்களை வீழ்த்த அவருக்கு 42 போட்டிகளே தேவைப்பட்டது. இதன் மூலம் சொந்த மண்ணில் அதிகவேகமாக 250 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இலங்கையின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனுடன் பகிர்ந்து கொண்டார்.
சொந்த மண்ணில் விரைவாக 250 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இந்திய அளவிலும், உலக அளவிலும் முதல் இடத்தை ரவிச்சந்திரன் அஷ்வின் பிடித்தார்.
அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரை இந்திய அளவில் வீழ்த்தி இருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் 42 போட்டிகளில் 250 விக்கெட்dஉகளை வீழ்த்தி இருக்கிறார். அனில் கும்ப்ளே 43 போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 51 போட்டிகளிலும் இந்த மைல்கல்லை எட்டி உள்ளனர்.
அத்துடன், உலக அளவில் முத்தையா முரளிதரனுடன் இதே பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர்கள் இருவரும் 42 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி உள்ளனர்.
இந்தப் பட்டியலில் இலங்கையின் ரங்கன ஹேரத் 44 போட்டிகளிலும், தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயின் 49 போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 51 போட்டிகளிலும் 250 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.
ஓமானிடம் தோல்வியடைந்த இலங்கை வளர்ந்து வரும் அணி
பங்களாதேஷில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் …….
முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதம் இந்தியாவுக்கும், தென்னாபிரிக்காவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் குறைந்த போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையை ரவிச்சந்திரன் அஷ்வின் சமன் செய்து சாதனை படைத்திருந்தார்.
முத்தையா முரளிதரன் தனது 66 ஆவது டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதேபோன்று ரவிச்சந்திரன் அஷ்வினும் தனது 66 ஆவது டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட ரவிச்சந்திரன் அஷ்வின், டுவைன் பிராவோவின் விக்கெட்டை வீழ்த்தி தனது கன்னி டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார்.
அதன் பிறகு இங்கிலாந்தின் அலெஸ்டயார் குக்கை வீழ்த்தி 50 ஆவது விக்கெட்டையும், தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிரை வீழ்த்தி 100 ஆவது விக்கெட்டையும் எடுத்தார்.
தொடர்ந்து 150 ஆவது விக்கெட்டாக நியூஸிலாந்தின் மிட்செல் சான்ட்னரையும், 200 ஆவது விக்கெட்டாக அவுஸ்திரேலியாவின் மெத்யூ வேட்டையும் வீழ்த்தியிருந்தார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<