Home Tamil ஷமிம், தவ்ஹீத் அதிரடியோடு பங்களாதேஷ் இளம் அணிக்கு வெற்றி

ஷமிம், தவ்ஹீத் அதிரடியோடு பங்களாதேஷ் இளம் அணிக்கு வெற்றி

172

சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இளையோர் ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கை வீரர்களை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது. 

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி குறித்த சுற்றுப்பயணத்தில் 2 போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரில் பங்கெடுத்த பின்னர் தற்போது 5 போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் ஆடிவருகின்றது. 

சஹாரின் சாதனை பந்துவீச்சு மூலம் டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

தீபக் சஹாரின் ஹெட்ரிக் விக்கெட் உட்பட உலக சாதனை 6 விக்கெட்டுகள் மூலம் …

இந்த இளையோர் ஒருநாள் தொடரில் கடந்த சனிக்கிழமை (9) நடைபெறவிருந்த முதல் போட்டி மழையினால் கைவிடப்பட இரண்டாவது போட்டியும் மழையின் குறுக்கீடு இருந்த காரணத்தினால் அணிக்கு 31 ஓவர்களாக குறைக்கப்பட்டு இன்று (11) குல்னாவில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் இளம் வீரர்கள் முதலில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியினை துடுப்பாடுமாறு பணித்தனர். 

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கைத் தரப்பு நவோத் பரணவிதான மற்றும் சோனால் தினுஷ ஆகியோரின் துடுப்பாட்ட உதவியோடு 31 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அரைச்சதம் பெற்ற நவோத் பரணவிதான 75 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்கள் குவித்தார். இதேநேரம், சோனால் தினுஷ 34 பந்துகளுக்கு 41 ஓட்டங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் இளம் அணியின் பந்துவீச்சு சார்பில் ஷமிம் ஹொஸைன் மற்றும் றகிபுல் ஹஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 210 ஓட்டங்களை பெற, பங்களாதேஷ் இளம் அணி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

அவ்வணிக்காக ஷமிம் ஹொஸைன் மற்றும் தவ்ஹீத் ரித்தோய் ஆகியோர் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களின் அதிரடி துடுப்பாட்ட உதவியோடு பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 25.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 210 ஓட்டங்களுடன் அடைந்தது.

பங்களாதேஷ் தரப்பின் வெற்றியினை உறுதி செய்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஷமிம் ஹொஸைன் 61 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்களைப் பெற்றிருக்க, தவ்ஹீத் ரித்தோய் 56 பந்துகளில் 82 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் அம்ஷி டி சில்வா 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் தரப்பின் ஷமிம் ஹொஸைன் தெரிவு செய்யப்பட்டார்.

பங்களாதேஷ் – இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் மோதும் இளையோர் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி வியாழக்கிழமை (14) ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka U19
209/7 (31)

Bangladesh U19
210/5 (25.4)

Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Shahadat Hossain b Shamim Hossain 78 75 9 1 104.00
Mohammad Samaaz c Rakibul Hasan b Shamim Hossain 10 17 1 0 58.82
Ravindu De Silva c Parvez Hossain b Rakibul Hasan 33 22 5 0 150.00
Nipun Dananjaya lbw b Avishek Das 0 3 0 0 0.00
Avishka Tharindu st Akbar Ali b Rakibul Hasan 5 9 0 0 55.56
Sonal Dinusha c Rakibul Hasan b Shoriful Islam 41 34 2 0 120.59
Chamindu Wijesinghe not out 30 20 1 2 150.00
Rohan Sanjaya b Tanzid Hasan 2 3 0 0 66.67
Sandun Mendis not out 3 3 0 0 100.00


Extras 7 (b 0 , lb 1 , nb 0, w 6, pen 0)
Total 209/7 (31 Overs, RR: 6.74)
Fall of Wickets 1-40 (8.1) Mohammad Samaaz, 2-79 (13.4) Ravindu De Silva, 3-80 (14.3) Nipun Dananjaya, 4-93 (17.1) Avishka Tharindu, 5-160 (24.4) Navod Paranavithana, 6-186 (28.4) Sonal Dinusha, 7-191 (29.4) Rohan Sanjaya,

Bowling O M R W Econ
Tanzid Hasan 6 1 47 1 7.83
Avishek Das 6 0 42 1 7.00
Shoriful Islam 6 0 41 1 6.83
Shamim Hossain 7 0 41 2 5.86
Rakibul Hasan 6 0 37 2 6.17


Batsmen R B 4s 6s SR
Tanzid Hasan b Amshi De Silva 2 3 0 0 66.67
Parvez Hossain c & b Dilshan Madusanka 8 16 1 0 50.00
Mahmudul Hasan b Amshi De Silva 11 10 1 0 110.00
Tawhid Hridoy not out 82 56 7 3 146.43
Shahadat Hossain lbw b Amshi De Silva 3 7 0 0 42.86
Shamim Hossain lbw b Sandun Mendis 95 61 9 5 155.74
Akbar Ali not out 1 1 0 0 100.00


Extras 8 (b 0 , lb 0 , nb 0, w 8, pen 0)
Total 210/5 (25.4 Overs, RR: 8.18)
Fall of Wickets 1-3 (1.1) Tanzid Hasan, 2-20 (4.1) Parvez Hossain, 3-33 (5.4) Mahmudul Hasan, 4-42 (7.3) Shahadat Hossain, 5-203 (25.1) Shamim Hossain,

Bowling O M R W Econ
Dilshan Madusanka 5 0 38 1 7.60
Amshi De Silva 6 0 36 3 6.00
Rohan Sanjaya 6 0 46 0 7.67
Chamindu Wijesinghe 2 0 22 0 11.00
Sandun Mendis 3.4 0 42 1 12.35
Nipun Dananjaya 1 0 13 0 13.00
Avishka Tharindu 2 0 13 0 6.50



முடிவு – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி 

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க