ஐ.சி.சி. இற்கு மூன்று பலமிக்க கிரிக்கெட் சபைகளும் எதிர்ப்பா?

149
EDINBURGH, SCOTLAND - JUNE 30: Members of the ICC Council during the ICC Full Council meeting at The Waldorf Astoria, The Caledonian on June 30, 2016 in Edinburgh, Scotland. (Photo by Mark Runnacles-IDI/IDI via Getty Images)

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) தமது எதிர்கால போட்டி அட்டவணையில் (2023-31 வரையிலான காலப்பகுதிக்குள்) நடாத்தவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணம் போன்ற எட்டு கிரிக்கெட் தொடர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI), அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) ஆகியவை ஒருமித்த நிலையில் எதிர்ப்பை காட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Video – லசித் மாலிங்கவின் தலைமைத்துவம் சரியானதா? Cricket Kalam 36

அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியின் தோல்வி, T10 தொடருக்கு தெரிவாகியுள்ள…

சர்வதேச கிரிக்கெட் வாரியம் இந்த எட்டு கிரிக்கெட் தொடர்கள் மூலமும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேலதிகமாக ஒரு கிரிக்கெட் தொடரினை நடாத்துகின்றது எனக் கூறியே உலகில் உள்ள மூன்று பலமிக்க கிரிக்கெட் சபைகளாக (Big Three) கருதப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவை ஒருமித்த நிலையில் தமது எதிர்ப்பை காட்டியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

ஏனெனில் குறித்த சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடைபெறும் காலப்பகுதியில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்குபெறும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் பல பாதிக்கப்படுவதாக காரணம் காட்டப்பட்டிருக்கின்றது. அத்துடன் இவ்வாறாக எட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடாத்தப்படுவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பையும் பெறுமதி இல்லாத ஒன்றாக மாற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதேவேளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் எதிர்கால கிரிக்கெட் தொடர்கள் அடங்கலாக அதன் வரைவில் உள்ளடக்கியுள்ள புதிய விடயங்கள் மாற்றப்படாத சந்தர்ப்பத்தில், இந்திய கிரிக்கெட் சபை இந்த விடயங்களுக்கான தமது ஒப்ப அனுமதியினை வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

தற்போது மூன்று பலமிக்க கிரிக்கெட் சபைகளும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பினைக் காட்டுவதனால் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் இந்த மூன்று கிரிக்கெட் சபைகளுக்கும் இடையில் வரும் நாட்களில் சில முரண்பாடுகள் ஏற்பட முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<