பாகிஸ்தானுடனான டி-20 யிலிருந்து பெட் கம்மின்ஸ் திடீர் விலகல்

145
Australia to Rest Pat Cummins

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ் விளையாடமாட்டார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

அவுஸ்திரேலியாபாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.  

ஸ்மித்தின் அபாரத்தினால் பாகிஸ்தானை பந்தாடியது ஆஸி.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 …….

நேற்றுமுன்தினம் கென்பராவில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி பெர்த்தில் நாளை (08) நடைபெறவுள்ளது. இதன் முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு வழங்க அவுஸ்திரேலிய தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.  

டி20 கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் எதிர்வரும் 21ஆம் திகதி இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்பிறகு நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது

எனவே, இந்த இரண்டு தொடர்களுக்கும் சிறந்த முறையில் தயாராகுவதற்காக வேகப் பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸுக்கு பாகிஸ்தானுடனான 3ஆவது டி20 போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது

அவுஸ்திரேலிய அணிக்காக அண்மைக்காலமாக சிறந்த முறையில் பிரகாசித்து வருகின்ற பெட் கம்மின்ஸ், இவ்வருடத்தில் மாத்திரம் 8 டெஸ்ட், 16 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதில் இம்முறை இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் அனைத்துப் போட்டிகளிலும் (10 போட்டிகள்) விளையாடிய அவர், அதன்பிறகு நடைபெற்ற ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரிலும் விளையாடியிருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, தற்போது தனது சொந்த ஊரான சிட்னிக்குச் சென்றுள்ள பெட் கம்மின்ஸ், எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஷெபீல்ட் தொடரில் மேற்கு அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடவுள்ளார்.  

இதேவேளை, பாகிஸ்தானுடனான 3ஆவது டி20 போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள பெட் கம்மின்ஸுக்குப் பதிலாக சீயன் அபோட் அவுஸ்ரேலியா சார்பாக சர்வதேச டி20 அறிமுகத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<