T10 லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கையர்களுக்கு குவியும் வாய்ப்புக்கள்

161

இந்த மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்திருக்கின்றது.   

T10 லீக் கிரிக்கெட் தொடரில் மற்றுமொரு இலங்கை வீரர்

இந்த மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில்………

இந்த T10 லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் 7 பேர் இலங்கை வீரர்கள் மாத்திரமே முன்னர் கொள்வனவு செய்யப்பட்டிருந்தனர். எனினும், இந்த கிரிக்கெட் தொடரில் விளையாட ஓப்பந்தம் செய்யப்பட்ட பாகிஸ்தான், பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களுக்கு குறித்த நாடுகளின் கிரிக்கெட் சபைகள் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்திருக்கின்றன. இதனால், இந்த T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. 

அதன்படி, ஏற்கனவே 5 இலங்கை வீரர்கள் T10 லீக் கிரிக்கெட் தொடரில் மேலதிகமாக வாய்ப்பு பெற்ற நிலையிலேயே தற்போது இன்னும் 3 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இதேவேளை, இன்னும் மேலதிகமாக 3 வீரர்கள் இணைந்த நிலையில் T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரிக்கின்றது. 

புதிதாக இணைந்துள்ளவர்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் T10 லீக் கிரிக்கெட் தொடரில் ஆடும் டெல்லி புல்ஸ் அணிக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு, அதிரடி சகலதுறை வீரர் அசேல குணரத்ன நொத்தர்ன் வோரியர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். அதேநேரம், மாய சுழல் பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார கர்நாடாக டஸ்கர்ஸ் அணிக்காக T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீரர்களில் அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கை கிரிக்கெட் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்ற நிலையில், அசேல குணரத்ன மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகியோருக்கு T10 லீக் கிரிக்கெட் தொடர் மூலம் தங்களது திறமைகளை மீண்டும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கின்றது.

T10 லீக் கிரிக்கெட் தொடரில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் இலங்கை வீரர்கள் அனைவரும் தொடரில் பங்கேற்கும் 7 அணிகளுக்காக ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை வீரர்களின் விபரம்

பங்களா டைகர்ஸ் – திசர பெரேராசெஹான் ஜயசூரியகெவின் கொத்திகொட, பிரபாத் ஜயசூரிய  

மரதா அரேபியன்ஸ் – லசித் மாலிங்கதசுன் ஷானக்கவனிந்து ஹசரங்க

டீம் அபூதாபி – நிரோஷன் திக்வெல்ல

டெக்கான் கிளாடியேட்டர்ஸ் – பானுக்க ராஜபக்ஷ

டெல்லி புல்ஸ் – குசல் பெரேராதுஷ்மன்த சமீர, அஞ்சலோ மெதிவ்ஸ்

நோதர்ன் வொர்ரியர்ஸ் – நுவன் பிரதீப், அசேல குணரத்ன

கர்நாடாக டஸ்கர்ஸ் – மலிந்த புஷ்பகுமார

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<