AFC U19 சம்பியன்ஷிப் தகுதிகாண் தொடருக்காக கட்டார் சென்றுள்ள இலங்கை அணி 

175
Football Association of Malaysia (Official) FB

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோர் AFC கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்காக இலங்கை இளையோர் அணி கட்டார் பயணமாகியுள்ளது. 

AFC 19 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி முதல் 10ம் திகதிவரை கட்டாரின் தோஹாவில் நடைபெறவுள்ளது.

ஹிலாலின் இரட்டை கோலினால் லெபனானிடம் வீழ்ந்த இலங்கை

லெபனானுக்கு எதிரான 2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண்….

இதற்காக கட்டார் சென்றுள்ள இலங்கை அணி B குழுவில் இடம்பெற்றுள்ளதுடன், கட்டார், துர்க்மெனிஸ்தான் மற்றும் யேமன் ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.  இந்த போட்டிகளின் அடிப்படையில், குழுநிலையில் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக சம்பியன்ஷிப்பிற்கு தெரிவாகும் என்பதுடன், இதில், குழுநிலை போட்டிகளின் நிறைவில் சிறந்த புள்ளிகளை பெற்று, இரண்டாவது இடங்களை பிடிக்கும் இரண்டு அணிகளும் சம்பியன்ஷிப்பிற்கு தகுதிபெறும்.

அதேநேரம், தகுதிகாண் போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான SAFF போட்டிகளில் விளையாடிய அதிகமான வீரர்கள் இந்த குழாத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த தொடரில் இலங்கை அணியானது பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளிடம் தோல்வியடைந்திருந்தாலும், அவர்கள் விளையாடிய விதம், இந்தப் தொடரில் அவர்கள் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் கடினமான குழுவில் இடம்பிடித்துள்ள இலங்கை அணியை, பயிற்றுவிப்பாளர் மொஹமட் அமானுல்லாஹ் தனது அனுபவத்தின் ஊடாக சிறப்பாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், B குழுவில் உள்ள கட்டார் அணி கடந்த 2018ம் ஆண்டு பருவகாலத்தில் அரையிறுதிவரை முன்னேறியிருந்தது.  

தென் கொரியாவை சமாளிக்குமா இலங்கை?

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் இடம்பெறவுள்ள பிஃபா….

இதேவேளை, இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில், கட்டார் அணியை எதிர்வரும் 6ம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 9.40 இற்கு நடைபெறவுள்ளது.

இரண்டாவது போட்டியில் இலங்கை அணி, யேமன் அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், இந்தப் போட்டி 8ம் திகதி இலங்கை நேரப்படி இரவு 7.40 இற்கு நடைபெறவுள்ளது. 

அதேநேரம், மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி, துர்க்மெனிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி எதிர்வரும் 10ம் திகதி இலங்கை நேரப்படி இரவு 7.40 இற்கு நடைபெறவுள்ளது. குறித்த போட்டிகள் அனைத்தும் தோஹா ஸ்போர்ட்ஸ் சிட்டி (Doha Sports City) அரங்கில் நடைபெறவுள்ளன.

 மேலும் பல காலபந்து செய்திகளைப் படிக்க