நியூசிலாந்து தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து

147
©Getty Images

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியினை பதிவு செய்துள்ளது. 

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட T20 தொடர்  மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடுகின்றது.

MCC யின் சம்பியன் கவுன்டி போட்டி இலங்கையில்: சங்கா அணித் தலைவர்

மெரில்போன் கிரிக்கெட் கழகம் (MCC) அதன் …

அதன்படி, இங்கிலாந்து அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெறுகின்ற நிலையில் தொடரின் முதல் போட்டி கிறைஸ்ட்சேர்ச் நகரில் இன்று (1) ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை நியூசிலாந்து அணிக்கு வழங்கினார். 

அதன்படி முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது. 

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரொஸ் டெய்லர் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 35 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்து தனது தரப்பில் அதிக ஓட்டங்களை பதிவு செய்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய டேரைல் மிச்செல், 17 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சாய்க்க சேம் கர்ரன், ஆதீல் ரஷீட் மற்றும் பட்ரிக் பிரவுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 154 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி சற்று மோசமான ஆரம்பத்தினை காட்டியிருந்தது. 

எனினும், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் அணியின் தலைவர் இயன் மோர்கன் ஆகியோர் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினர். இவர்களின் பங்களிப்போடு இங்கிலாந்து கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 18.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 154 ஓட்டங்களுடன் அடைந்தது.  

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக உதவிய ஜேம்ஸ் வின்ஸ் T20 சர்வதேச போட்டிகளில் பெற்ற அவரது கன்னி அரைச்சதத்துடன் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதேநேரம் மோர்கன், 21 பந்துகளில் 34 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல்வீரரான மிச்செல் சான்ட்னர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி இங்கிலாந்துக்கு நெருக்கடி தந்த போதிலும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது. 

அவுஸ்திரேலிய அணியில் இருந்து விலகும் கிளென் மெக்ஸ்வெல்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரமான கிளென் மெக்ஸ்வெல் தனது உள ஆரோக்கியம் சரியாக இல்லாத காரணத்தினால் ……

போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜேம்ஸ் வின்ஸ் தெரிவாகினார். இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் தமது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது. 

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) வெலிங்டன் நகரில் ஆரம்பமாகின்றது. 

போட்டியின் சுருக்கம்

நியூசிலாந்து – 153/5 (20) ரொஸ் டெய்லர் 44(35), டேரைல் மிச்செல் 30(17)*, கிறிஸ் ஜோர்டன் 28/2(4)

இங்கிலாந்து – 154/3 (20) ஜேம்ஸ் வின்ஸ் 59(38), ஜொன்னி பெயர்ஸ்டோவ் 35(28), இயன் மோர்கன் 34(21)*, மிச்செல் சான்ட்னர் 23/3(4)

முடிவு – இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<