கிரிக்கெட் ஊழல் விவகாரத்தில் ஷகீப் அல் ஹசனுக்கு தடை

161

ஐ.சி.சி ஊழல் தடுப்பு விதி மீறல் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசனுக்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலினால் (ICC) இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஓர் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட தடையாக இது அமைந்துள்ளது.

இந்திய தொடரிலிருந்து விலகும் தமிம் இக்பால் : முஷ்பிகுர் ரஹீமின் அதிரடி அறிவிப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம்…..

பின்வரும் ஐ.சி.சி ஊழல் தடுப்பு விதிகளை மீறியதை ஷகீப் அல் ஹசன் ஒப்புக்கொண்டுள்ளார். 

1. உறுப்புரை 2.4.4 – 2018 ஜனவரியில் பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் மற்றும்/ அல்லது 2018 ஐ.பி.எல். தொடர்பில் – தம்மை ஊழல் நடத்தைக்கு அழைத்தது அல்லது அணுகியதன் முழு விபரத்தை ACU வுக்கு வெளியிடத் தவறியது. 

2. உறுப்புரை 2.4.4 – 2018 ஜவரியில் முத்தரப்பு தொடரில் முறையே இரண்டாவது அணுகள் தொடர்பில் – தம்மை ஊழல் நடத்தைக்கு அழைத்தது அல்லது அணுகியதன் முழு விபரத்தை ACU வுக்கு வெளியிடத் தவறியது.  

3. உறுப்புரை 2.4.4 – 2018 ஏப்ரல் 26 இல் சன்ரைசஸ் ஹைத்ராபாத் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 2018 ஐ.பி.எல். போட்டி தொடர்பில் – தம்மை ஊழல் நடத்தைக்கு அழைத்தது அல்லது அணுகியதன் முழு விபரத்தை ACU வுக்கு வெளியிடத் தவறியது.

ஊழல் எதிர்ப்பு தீர்ப்பாய விசாரணை ஒன்றில் இந்த விதியின் ஏற்பாடுகளின் கீழ், குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட ஷகீப் அல் ஹசன், ஐ.சி.சி. தடைக்கு இணங்கினார். தடையின் ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் நிபந்தனைகளை மதித்து செயற்படுவதன் திருப்தி அடிப்படையில் 2020 ஒக்டோபர் 29ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட்டை தொடர்வதற்கு அவருக்கு முடியும். 

இலங்கையுடனான இரண்டாவது T20 யில் இருந்து விலகும் ஸ்டார்க்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான T20I….

இது தொடர்பில் ஷகீப் அல் ஹசன் கூறியதாவது, “நான் விரும்பும் விளையாட்டில் தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி கடுமையாக கவலைப்படுகிறேன். என்னை அணுகியது பற்றி முறையிடாததற்கான இந்த தடையை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். உழலுக்கு எதிரான செயற்பாட்டில் வீரர்கள் முக்கிய பங்கு வகிப்பதை ஐ.சி.சி. ACU எதிர்பார்ப்பதோடு இதில் எனது பணியை நான் செய்யவில்லை. 

உலகெங்கும் உள்ள பெரும்பான்மையான வீரர்கள் மற்றும் ரசிகர்கள் போன்று, ஊழல் அற்ற விளையாட்டாக கிரிக்கெட்டை மாற்ற நாள் விரும்புவதோடு  நான் செய்தது போல் அதே தவறை இளம் வீரர்கள் செய்யாமல் இருப்பதற்கு அது தொடர்பான அறிவூட்டும் நிகழ்ச்சிகளிலும் ஐ.சி.சி. ACU உடன் இணைந்து செயற்படுவதற்கு நான் எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.

நேர்மை தொடர்பிலான ஐ.சி.சி. பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷ் கூறும்போது, “ஷகீப் அல் ஹசன் அதிக அனுபம் கொண்ட ஒரு சர்வதேச வீரர். அவர் பல அறிவூட்டும் நிகழ்ச்சிகளுக்கும் பங்கேற்று இந்த விதிகளின் கடப்பாடுகளை தெரிந்தே இருக்கிறார். தம்மை அணுகியது பற்றி அனைத்தையும் அவர் கூறி இருக்க வேண்டும். 

தமது தவறை ஏற்றுக்கொண்ட ஷகீப் அல் ஹசன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். தமது தவறு பற்றி இளம் வீரர்களுக்கு அறிவூட்டும் நேர்மை பிரிவின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு உதவ அவர் முன்வந்துள்ளார். இதனை நான் மகழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்றார்.  

டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு

டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் 2 டெஸ்ட்……

கிரிக்கெட் ஊழலுடன் தொடர்புபட்டவர் என்று ஐ.சி.சியினால் அடையாளம் காணப்பட்ட தீபக் அகர்வால் என்பவர் தம்மை அணுகியது பற்றியே ஹசன் ஐ.சி.சியை அறிவுறுத்த தவறியுள்ளார்.    

அணியின் விபரம் பற்றி ஷகீப்பிடம், அகர்வால் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டிருப்பதாக ஐ.சி.சி. குறிப்பிட்டுள்ளது. இதில் ஒரு சந்தர்ப்பம் 2018 ஏப்ரல் 26 ஆம் திகதி சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியாகும். அந்தப் போட்டியில் சன்ரைசஸ் 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.    

“இந்த தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. அகர்வால் அணி பற்றி தகவல்களை கேட்ட விபரமே அழிக்கப்பட்டதாக அவர் உறுதி செய்தார்” என்று ஐ.சி.சி. குறிப்பிட்டுள்ளது.  

ஒருநாள் சர்வதேச போட்டியின் சகலதுறை வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் 32 வயதான ஷகீப் அல் ஹசன் 338 சர்வதேச  போட்டிகளில் ஆடியுள்ளார்.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<