இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 2018/19ஆம் ஆண்டுகளின் பருவகாலங்களுக்குரிய டிவிஷன் – I கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக செயற்பட்ட பாடசாலைகளுக்கு பந்துவீசும் இயந்திரங்களை (Bowling Machines) அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது.
எம்மால் இன்னும் சாதிக்க முடியும் – பானுக்க ராஜபக்ஷ
துடுப்பாட்டத்தில் எமக்கு இன்னும் சாதிக்க முடியுமாக …….
பாடசாலைகளுக்கு பந்துவீசும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவின் தலைமையில் நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வில், டிவிஷன் – I கிரிக்கெட் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 16 பாடசாலைகள் பந்துவீசும் இயந்திரங்கள் பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன.
குறித்த நிகழ்வில், பந்துவீசும் இயந்திரங்களை பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் மற்றும் பொறுப்பான ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் அன்பளிப்புச் செய்யப்பட்ட பந்துவீசும் இயந்திரங்கள் ஒவ்வொன்றும் இலங்கை நாணயப்படி 650,000 ரூபா பெறுமதி கொண்டவை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இன்னும், பந்துவீசும் இயந்திரங்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வில் கருத்து வெளியிட்டிருந்த இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, இது வெறும் ஆரம்ப நிகழ்வு என்று குறிப்பிட்டிருந்ததோடு, இன்னும் 36 பாடசாலைகளுக்கு பந்துவீசும் இயந்திரங்கள் வழங்கப்பட இருப்பதாக கூறியிருந்தார்.
இலங்கையுடனான இரண்டாவது T20 யில் இருந்து விலகும் ஸ்டார்க்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான T20i ……
”இது வெறும் ஆரம்பம் மாத்திரமே, நாம் டிவிஷன் – I கிரிக்கெட் தொடரில் ஆடும் 36 பாடசாலைகளுக்கும் பந்துவீசும் இயந்திரங்களை விரைவில் வழங்க திட்டமிட்டிருக்கின்றோம். அதோடு, பாடசாலை கிரிக்கெட்டினை இன்னும் விருத்தி செய்வதற்காக மேலதிக நிதியினை ஒதுக்கவும் எதிர்பார்த்துள்ளோம். பாடசாலை கிரிக்கெட்டை விருத்தி செய்வதன் மூலம் இன்னும் திறமைகளை இனம் காண்பதற்கான ஒரு சந்தர்ப்பம் உருவாக்கப்படுகின்றது.”
பந்துவீசும் இயந்திரங்களை அன்பளிப்பாக பெறும் பாடசாலைகள்
- புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
- புனித தோமையர் கல்லூரி, கல்கிசை
- புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவ
- பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ
- திரித்துவ கல்லூரி, கண்டி
- தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு
- மஹிந்த கல்லூரி, காலி
- மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு
- புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை
- புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
- ஸாஹிரா கல்லூரி, கொழும்பு
- மஹநாம கல்லூரி, கொழும்பு
- புனித பெனடிக்ட் கல்லூரி, கொட்டாஞ்சேனை
- ஆனந்த கல்லூரி, கொழும்பு
- நாலந்த கல்லூரி, கொழும்பு
- றிச்மன்ட் கல்லூரி, காலி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<