த ஹன்ரட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 24 இலங்கை வீரர்கள்

190

இங்கிலாந்து கிரிக்கெட் சபை, அணிக்கு 100 பந்துகள் கொண்ட “த ஹன்ரட்” என்னும் புதிய வகையிலான கிரிக்கெட் தொடர் ஒன்றை அடுத்த ஆண்டு நடாத்தவுள்ளது. 

இந்த கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் இந்தவாரம் நடைபெறவுள்ள நிலையில், ஏலத்தில் பங்கெடுக்க இலங்கையினை சேர்ந்த 24 கிரிக்கெட் வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மஹேலவின் அணியில் விளையாடவுள்ள ஜொப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) அடுத்த ஆண்டு நடாத்தவுள்ள அணிக்கு 100 பந்துகள் கொண்ட…

வீரர்கள் ஏலத்தில் அதிக அடிப்படை விலையில், பங்கெடுக்கும் இலங்கை வீரராக நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க காணப்படுகின்றார். அந்தவகையில், லசித் மாலிங்கவின் அடிப்படை விலையாக 125,000 யூரோக்கள் (இலங்கை நாணயப்படி 2.5 கோடி ரூபா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

அதேநேரம், இலங்கை அணிக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தலைவராக செயற்படும் திமுத் கருணாரத்ன, அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்களும் ஏலத்தில் பங்கெடுக்க தமது விருப்பத்தினை தெரிவித்திருக்கின்றனர். இந்த இரண்டு வீரர்களினதும் அடிப்படை விலையாக 75,000 யூரோக்கள் (இலங்கை நாணயப்படி 1.5 கோடி ரூபா) நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. 

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்ட லஹிரு திரிமான்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் இசுரு உதான போன்றோருக்கு த ஹன்ரட் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் அடிப்படை விலையாக 50,000 யூரோக்கள் (இலங்கை நாணயப்படி 1 கோடி ரூபா) நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் 40,000 யூரோக்களுக்கு (இலங்கை நாணயப்படி 90 இலட்ச ரூபா) ஏலத்தில் பங்கெடுக்கும் இலங்கை வீரர்களாக தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாந்து, தனுஷ்க குணத்திலக்க, சுரங்க லக்மால், குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க, திசர பெரேரா, நுவான் பிரதீப் மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் உள்ளனர். 

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 98

லசித் மாலிங்க தலைமையில் அவுஸ்திரேலியா செல்லவுள்ள இலங்கை அணி, இலங்கைக்கு எதிராக கோல் மழை பொழிந்த…

இவர்கள் தவிர இலங்கையை சேர்ந்த வனிந்து ஹஸரங்க, லஹிரு குமார, ஜீவன் மெண்டிஸ், கசுன் ராஜித, சீக்குகே பிரசன்ன, ரமித் ரம்புக்வெல மற்றும் உபுல் தரங்க ஆகியோர் த ஹன்ரட் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கின்ற போதிலும், இவர்களது அடிப்படை விலைகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. 

இத்தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவிருக்கின்றது. இந்த தொடரில், இங்கிலாந்தின் 7 பிராந்தியங்களை சேர்ந்த எட்டு அணிகள் பங்குபெறவிருக்கின்றன. இதில், சௌத்எம்ப்டன் பிராந்தியத்தை சேர்ந்த சௌத்தர்ன் பிரேவ் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்த்தன தலைமை பயிற்சியாளராக செயற்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<