இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் முடிவுக்கு வந்தது. இதில் முக்கியமான சர்ச்சை, சுப்பர் ஓவரில் இறுதிப் போட்டி சமனிலையில் முடிந்தும், பௌண்டரிகள் அடிப்படையில், இங்கிலாந்து அணிக்கு உலகக் கிண்ணம் வழங்கப்பட்டிருந்ததாகும்.
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலமாகும் இளம் வனிந்து ஹசரங்க!
இலங்கை கிரிக்கெட் அணியின் கடந்தகால தொடர் ……………
குறித்த இந்த சம்பவத்தின் பின்னர், இந்த பௌண்டரி விதிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கிரிக்கெட் ஆர்வாளர்கள் கருத்து வெளியிட்டு வந்தனர்.
இவ்வாறான நிலையில், ஐசிசியின் நிர்வாகக் குழு சந்திப்பு டுபாயில் நடைபெற்ற நிலையில், சுப்பர் ஓவரின் பௌண்டரி விதிமுறையில், மாற்றத்தை கொண்டுவர ஐசிசி முடிவுசெய்துள்ளது. அதன்படி, இனி ஐசிசியால் நடத்தப்படும் தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், சுப்பர் ஓவர் சமனிலையில் முடிவடைந்தால், போட்டியின் முடிவில் பௌண்டரிகள் கணக்கிடப்படாது என ஐசிசி அறிவித்துள்ளது.
இனி நடைபெறவுள்ள ஐசிசி தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் சுப்பர் ஓவரின் மூலம் சமனிலையாகுமாயின், ஒரு அணி அதிக ஓட்டங்களை பெறும் வரையில் சுப்பர் ஓவர்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்ற தீர்மானத்தை ஐசிசி கொண்டுவந்துள்ளது.
அதன்படி, ஒரு சுப்பர் ஓவர் சமனிலையடைந்தால், மீண்டும் ஒரு சுப்பர் ஓவர் வழங்கப்படும். அதுவும் சமனிலையானால், தொடர்ச்சியாக சுப்பர் ஓவர்கள் வழங்கப்படும். எனவே, ஒரு அணி அதிக ஓட்டங்களை பெறும் வரையில் இவ்வாறு சுப்பர் ஓவர்கள் இனிவரும் ஐசிசி தொடர்களில் வழங்கப்படவுள்ளது.
பாகிஸ்தானை வென்ற இலங்கை அணிக்கு 145,000 டொலர்கள் பணப்பரிசு
பாகிஸ்தான் அணியுடனான T20i கிரிக்கெட் …..
இதேவேளை, ஐசிசியினால் நடத்தப்படும் தொடர்களின் லீக் போட்டிகளிலும் சுப்பர் ஓவர் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறையையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் லீக் போட்டிகள் சமனிலையில் முடிவடையுமாயின், அணிகளுக்கு இடையில் புள்ளிகள் பகிரப்படும். ஆனால், புதிய விதிமுறையின் படி, சுப்பர் ஓவரின் மூலம் அனைத்து போட்டிகளுக்கும் முடிவுகள் கொண்டுவரப்படும்.
ஆனால், இறுதிப் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டிகளுக்கு போன்று லீக் போட்டிகளில் சுப்பர் ஓவர் சமனிலையில் முடிந்தால் மீண்டும் சுப்பர் ஓவர்கள் வழங்கப்பட மாட்டாது. குறித்த சுப்பர் ஓவர்கள் சமனிலையானால், ஏற்கனவே உள்ள விதிமுறையின் படி, அதிக பௌண்டரிகளை விளாசிய அணிக்கு வெற்றி வாய்ப்பு வழங்கப்படும்.
அதேநேரம், ஐசிசியினால் நடத்தப்படும் அனைத்து தொடர்களில் வெற்றியாளரை கட்டயாம் தெரிவுசெய்ய வேண்டிய நொக்-அவுட் போட்டிகளில், ஒரு அணி அதிக ஓட்டங்களை பெறும் வரையில் சுப்பர் ஓவர்கள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<