இரண்டாவது முறையும் சம்பியன் பட்டம் வென்ற பன்சேனை பாரி வித்தியாலயம்

141

மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் மற்றும் பன்சேனை பாரி வித்தியாலயம் ஆகியவை இடையில் இரண்டாவது முறையாக நடைபெற்று முடிந்திருக்கும் கால்பந்து பெரும் போட்டியில் (Football Big Match) பன்சேனை பாரி வித்தியாலயம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது. 

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முதல்முறையாக நடைபெற்ற இந்த கால்பந்து பெரும் போட்டியில்  பன்சேனை பாரி வித்தியாலயம் சம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில் இரண்டாவது கால்பந்து பெரும் போட்டி பன்சேனை பாரி வித்தியாலய மைதானத்தில் வியாழக்கிழமை (10) ஆரம்பமானது. 

Photos: BT/BW/Panchenai Pari Vid VS BT/BW/Ambilanthurai Kalaimahal Vid | Girls Football Big Match

ஒரு பாதி 30 நிமிடங்கள் கொண்ட இந்த போட்டியின் ஆரம்பத்தில் மைதான சொந்தக்காரர்கள் சிறந்த துவக்கத்தினை காட்டியிருந்தனர். சில வாய்ப்புக்கள் மூலம் போட்டியின் முதல் கோலினை பன்சேனை பாரி வித்தியாலயம் பெற முயற்சியிருந்த போதிலும் அது வெற்றியளித்திருக்கவில்லை. 

எனினும், போட்டி முன்னேறிய நிலையில் பன்சேனை வித்தியாலய அணிக்காக அதன் தலைவி வசந்தினி போட்டியின் 9ஆவது நிமிடத்தில் முதல் கோலினை பெற்றார். 

வசந்தினி பெற்ற கோலோடு, போட்டியின் முதல் பாதி நிறைவுக்குவரும் போது பன்சேனை பாரி வித்தியாலயம் ஆட்டத்திலும் முன்னிலை அடைந்து கொண்டது. 

முதல் பாதி –பாரி வித்தியாலயம் 1 – 0 கலைமகள் வித்தியாலயம்

தொடர்ந்து போட்டியின் இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் தங்களுக்காக கோல்கள் பெற முயற்சிகள் செய்திருந்த போதிலும் குறித்த முயற்சிகள் அனைத்தும் வீணாகியிருந்தன. 

இந்நிலையில், முதல் பாதியில் பெற்றுக்கொண்ட கோலோடு பன்சேனை பாரி வித்தியாலயம் போட்டியின் வெற்றியாளர்களாக மாறிக்கொண்டது. 

முழு நேரம் –பாரி வித்தியாலயம் 1 – 0 கலைமகள் வித்தியாலயம்

>> மேலும் கால்பந்து செய்திகளை படிக்க<<