ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் ஆரம்ப சுற்றின் முக்கிய சில போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (02) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,
ரியல் மெட்ரிட் எதிர் கிளப் ப்ரூகஸ்
பதின்மூன்று முறை ஐரோப்பிய சம்பியனான ரியல் மெட்ரிட் பெல்ஜியத்தைச் சேர்ந்த கழகமான கிளப் ப்ரூகசுக்கு எதிராக முதல் பாதியில் 2-0 என பின்னடைவை பெற்ற நிலையில் இரண்டாவது பாதி ஆட்டத்தில் போட்டியை போராடி சமநிலை பெறச் செய்தது.
மெஸ்ஸியின் காயத்திற்கு இடையே பார்சிலோனா வெற்றி
ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A ……
தனது சொந்த மைதானமான பெர்னபுவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கிளப் ப்ரூகஸின் 21 வயது வீரர் எம்மானுவேல் டன்னிஸ் 9 மற்றம் 39 ஆவது நிமிடங்களில் இரட்டை கோல் புகுத்தி அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் இரண்டாவது பாதியில் செயற்பட்ட ரியல் மெட்ரிட் அணித்தலைவர் செர்ஜியோ ராமோஸ், கரிம் பென்சமா பரிமாற்றிய பந்தை தலையால் முட்டி கோல் பெற்றார். எனினும், இந்த கோல் ஓப் சைட் என நிராகரிக்கப்பட்ட நிலையில் வீடியோ உதவி நடுவர் மூலமே உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 84 ஆவது நிமிடத்தில் இரண்டு மஞ்சள் அட்டை பெற்று ப்ரூகஸ் அணித்தலைவர் ரூட் வோர்மர் வெளியேற்றப்பட்ட ஒரு நிடத்தில் டோனி க்ரூஸ் பந்தை வழங்க கசிமிரோ அதனை தலையால் முட்டி போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார்.
தனது முதல் சம்பியன்ஸ் லீக் போட்டியில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்ற ரியல் மெட்ரிட் தற்போது A குழுவில் கடைசி இடத்தில் உள்ளது.
மன்செஸ்டர் சிட்டி எதிர் டிமானோ சக்ரெப்
எட்டிஹாட் அரங்கியில் நடைபெற்ற போட்டியில் டிமானோ சக்ரெப் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய மன்செஸ்டர் சிட்டி 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.
போட்டியின் ஆரம்பம் தொட்டு பந்தை அதிக நேரம் தன்வசம் வைத்திருந்த மன்செஸ்டர் சிட்டி, முதல் பாதியில் கோல் எதுவும் பெறாதபோதும் 66 ஆவது நிமிடத்தில் பதில் வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மூலம் முதல் கோலை புகுத்தியது.
இந்நிலையில் கடைசி விசில் ஊதுவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது 19 வயதான பில் போடன், சிட்டி சார்பில் இரண்டாவது கோலை புகுத்தினார்.
இந்த வெற்றியுடன் தனது முதல் இரு போட்டிகளிலும் வெற்றியீட்டி இருக்கும் மன்செஸ்டர் சிட்டி சம்பியன்ஸ் லீக் C குழுவில் முதலிடத்தை பிடித்ததோடு அந்த அணி அடுத்து ஒக்டோபர் 22ஆம் திகதி அட்லன்டா கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது.
டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் எதிர் பயேர்ன் முனிச்
தனது சொந்த மைதானத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்த டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர், ஜெர்மனி கழகமான முனிச்சுக்கு எதிராக 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.
டொட்டன்ஹாம் அணியை துவம்சம் செய்த கிரப்ரி நான்கு கோல்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அரங்கில் நடைபெற்ற போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் கடந்த பருவத்தில் இரண்டாம் இடத்தை பெற்ற டொட்டன்ஹாம் சார்பில் சொன் ஹியுங் மின் கோல் பெற்று முன்னிலை பெற்றபோது அரங்கு எங்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர்.
மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு 30 ஆண்டுகளில் மோசமான ஆரம்பம்
ஓல்ட் டிரபர்டில் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற மன்செஸ்டர் …………
எனினும், மூன்று நிமிடங்கள் கழித்து கிமிச் மற்றும் 45 ஆவது நிமிடத்தில் லிவென்டோஸ்கி கோல் புகுத்த முனிச் அணி முதல் பாதியில் 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டம் டொட்டன்ஹாமுக்கு மறக்க முடியாத ஒன்றாக மாறியது. கிரப்ரி அடுத்தடுத்து 4 கோல்களை புகுத்தியதோடு லிவென்டோஸ்கி மற்றொரு கோலை பெற்றார்.
ஹெரி கேன் 61 ஆவது நிமிடத்தில் பெனால்டி கிக் ஒன்றின் மூலம் கோல் பெற்றபோதும் டொட்டன்ஹாமின் மோசமான தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
137 ஆண்டுகால வரலாற்றில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் தனது சொந்த மைதனத்தில் எந்த ஒரு போட்டியிலும் 7 கோல்களை விட்டுக்கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.
ஜுவன்டஸ் எதிர் பயெர் லெவர்குசன்
டியுரினில் நடைபெற்ற போட்டியில் லெவர்குசன் அணியை 3-0 என தோற்கடித்த ஜுவன்டஸ் சம்பியன்ஸ் லீக் D குழுவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
எதிரணி வீரரின் தவறை பயன்படுத்தி கொசலோ ஹிகுவைன் 17 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பெற்றதோடு பெடெரிகோ பெர்னார்டெச்சி 61 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை புகுத்த ஜுவன்டஸ் வெற்றியை நெருங்கியது.
இந்நிலையில் 88 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்றாவது கோலை புகுத்த ஜுவன்டஸ் வெற்றி உறுதியானது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<