இலங்கையுடன் சதமடித்து கோஹ்லியின் சாதனையை தகர்த்த பாபர் அசாம்

181

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான பாபர் அசாம் ஒருநாள் சர்வதேச அரங்கில் வேகமாக 11 சதங்களை கடந்தவர்கள் வரிசையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்து குறித்த பட்டியலில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார். குறித்த போட்டியின்மூலம் அவர் மேலும் பல சாதனைப் பதிவுகளையும் நிலைநாட்டினார்.  

ஷானக, ஷெஹானின் சாதனை இணைப்பாட்டம் வீண்

இலங்கை அணிக்கு எதிராக கராச்சி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்…

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று (30) கராச்சியில் நடைபெற்றது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பாகிஸ்தானின் நம்பிக்கை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பாபர் அசாம் 105 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 115 ஓட்டங்களை குவித்தார்.

இவ்வாறு 115 ஓட்டங்களை பெற்ற பாபர் அசாம் ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது 11ஆவது சதத்தை பதிவு செய்தார். இவ்வாறு 11 சதங்களை விளாசியதன் மூலம் ஒட்டுமொத்த அணிகளின் அடிப்படையில் வேகமாக 11 சதங்களை கடந்தவர்கள் வரிசையில் விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்துள்ளார்

சங்கீத், கமிந்து அபாரம் ஆட்டம்: வலுவான நிலையில் இலங்கை A அணி

இலங்கை A கிரிக்கெட் அணிக்கும், பங்களாதேஷ் A கிரிக்கெட் அணிக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற மூன்று நாட்கள் கொண்ட முதலாவது …

கடந்த 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதல் முறையாக சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட பாபர் அசாம் இதுவரையில் பாகிஸ்தான் அணிக்காக 73 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 11 சதங்கள், 15 அரைச்சதங்களுடன் மொத்தமாக 3,328 ஓட்டங்களை குவித்துள்ளார். தனது சிறந்த துடுப்பாட்டத்திற்கு பலனாக இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளார்

இவ்வாறு 73 போட்டிகளில் 71 இன்னிங்ஸ்களில் 11 சதங்கள் கடந்த பாபர் அசாம் குறித்த பட்டியலில் முதல் பாகிஸ்தான் வீரராகவும் இடம்பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தின் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹஸிம் அம்லா உள்ளார்

இலங்கையுடனான T20 தொடரில் அஸ்டன் டேர்னர் ஆடுவதில் சந்தேகம்

தற்போது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, குறித்த பயணத்தை……

ஒருநாள் சர்வதேச அரங்கில் வேகமாக 11 சதங்கள் கடந்த வீரர்கள் 

  1. ஹஸிம் அம்லா (தென்னாபிரிக்கா) – 64 இன்னிங்ஸ்
  2. குயின்டன் டி கொக் (தென்னாபிரிக்கா) – 65 இன்னிங்ஸ்
  3. பாபர் அசாம் (பாகிஸ்தான்) – 71 இன்னிங்ஸ்
  4. விராட் கோஹ்லி (இந்தியா) – 82 இன்னிங்ஸ்
  5. ஷிகார் தவான் (இந்தியா) – 86 இன்னிங்ஸ்
  6. டேவிட் வோர்னர் (அவுஸ்திரேலியா) – 86 இன்னிங்ஸ்
  7. ஆரோன் பின்ச் (அவுஸ்திரேலியா) – 88 இன்னிங்ஸ்

இதேவேளை, நேற்றைய போட்டியில் 54 ஓட்டங்களை கடக்கும் போது இந்த ஆண்டில் 1,000 ஓட்டங்களை கடந்த பாபர் அசாம், ஒரு ஆண்டில் 1,000 ஓட்டங்களை விரைவாக கடந்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 32 வருட சாதனையை முறியடித்துள்ளார்.  

இதற்கு முன்னர் 1987ஆம் ஆண்டு ஜாவிட் மியன்டாட் 21 இன்னிங்ஸ்களில் இம்மைக்கல்லை எட்டியிருந்தார். ஆனால், தற்போது 2019ஆம் ஆண்டில் 19 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள், 6 அரைச்சதங்களுடன் இவ்வாறு 1,000 ஓட்டங்களை கடந்து பாபர் அசாம் சாதனை ஏட்டை புதுப்பித்துள்ளார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<