பாதுகாப்பை விட கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தும் திரிமான்ன

148

பாகிஸ்தானில் இலங்கை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை விட கிரிக்கெட்டில் தான் அதிக கவனம் செலுத்துவோம் என தெரிவித்த இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் லஹிரு திரிமான்ன, இந்தத் தொடரில் விளையாடவுள்ள இளம் வீரர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் இலங்கை அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிட்டார்.  

இளம் வீரர்களுடன் பாகிஸ்தானுக்கு சவால் கொடுக்க தயாராகும் இலங்கை

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு …….

இலங்கைபாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டி தொடரானது, கராச்சியில் இன்று  (27) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

2009ஆம் ஆண்டு இலங்கை அணியினர் பயணித்த பஸ்வண்டி மீது லாகூரில் வைத்து பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் பிறகு கராச்சியில் நடைபெறவுள்ள முதலாவது இருதரப்பு தொடர் இதுவாகும்

இந்த நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணித் தலைவர்கள் பங்குகொண்ட கிண்ண அறிமுக நிகழ்வும், போட்டிக்கு முன்னதான ஊடகவியலாளர் சந்திப்பும் நேற்று மாலை கராச்சியில் இடம்பெற்றது

இதன்போது பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்த லஹிரு திரிமான்ன, இந்தத் தொடரில் பிரகாசிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கை அணியில் இடம்பெறுவதற்கான அரிய வாய்ப்பு இளம் வீரர்களுக்கு கிடைக்கும் என தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ”பாகிஸ்தான் அணியில் உள்ள முன்னணி வீரர்களுடன் விளையாடவுள்ள இந்தத் தொடரானது எங்களுக்கு ஒரு நல்ல சவால் என்று நான் கருகிறேன். ஒப்பீட்டளவில் அனுபவமற்ற அணியுடன் நாங்கள் இங்கு வந்துள்ளோம்

ஆனால் அதே நேரத்தில், இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் இந்த சுற்றுப்பயணத்தை தவிர்த்தமைக்கான முடிவையும் நாங்கள் மதிக்க வேண்டும். இது தனிப்பட்ட முடிவுகளைப் பற்றியது அல்ல, ஏனெனில் இதுபோன்ற நிலைமைகளில் முடிவெடுப்பதற்கு முன்பு உங்கள் குடும்பத்தினருடன் விரிவாகப் பேச வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.

”இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு தொடர்பில் எம்முடன் முதலில் கலந்துரையாடினர். பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படும் என 30 வீரர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே, தனிப்பட்ட முறையில், இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

பாதுகாப்புக்கு மாறாக கிரிக்கெட்டில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். சம பலம் பொருந்திய அணியொன்று கிடைத்துள்ளது. 25 வயதுக்கு குறைவான இளம் வீரர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். அவர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக அமைவுள்ளது

சொந்த மண்ணில் அணியை வழிநடாத்துவது பெரிய கௌரவம் – சர்பராஸ் அஹ்மட்

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி …….

அதேபோல, பாகிஸ்தானின் முதல்தர அணியை நாங்கள் சந்திக்கவுள்ளோம். எனவே, அதற்கு முகங்கொடுக்க நாங்கள் தயாராகவுள்ளோம். எம்மால் சிறந்த போட்டியொன்றை வழங்கி வெற்றியீட்ட முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.

பாதுகாப்பு அச்சம் காரணமாக லசித் மாலிங்க, திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, திசர பெரேரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விலகிய நிலையில் இலங்கை அணி லஹிரு திரிமான்ன தலைமையில் இன்று களமிறங்குகிறது.

முன்னதாக 2015ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் தலைவராக லஹிரு திரிமான்ன செயற்பட்டிருந்தார். குறித்த தொடரை 2க்கு 1 என நியூசிலாந்து அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<