சொந்த மண்ணில் அணியை வழிநடாத்துவது பெரிய கௌரவம் – சர்பராஸ் அஹ்மட்

151

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தமது நாட்டில் மீள நடாத்த முயற்சிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு (PCB) இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் வரப்பிரசாதமாக அமைகின்றது.

அந்தவகையில் 10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு முழுமையான இருதரப்பு தொடர் ஒன்றுக்காக சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது. 

இளம் வீரர்களுடன் பாகிஸ்தானுக்கு சவால் கொடுக்க தயாராகும் இலங்கை

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான……

இலங்கை அணியின் இந்த பாகிஸ்தான் சுற்றுப் பயணம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட், உபதலைவர் பாபர் அசாம் ஆகியோார் இலங்கை அணியின் இந்த சுற்றுப் பயணம் தொடர்பில் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இந்த சுற்றுப் பயணத்தில் முதலாவதாக பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் கராச்சி நகரில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெறவுள்ளது. சர்பராஸ், இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள இந்த ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தினையும் காண பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும் திரளாக வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

வெள்ளிக்கிழமைக்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. ஏனெனில் அன்று ஒரு சிறந்த சம்பவம் நடைபெறவிருக்கின்றது. அன்றைய தினத்தில் எனக்கு பின்னால் பெரும் திரளான ரசிகர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அவர்கள் எனக்கு மட்டும் ஆதரவு தராமல் (இலங்கை, பாகிஸ்தான் ஆகிய) இரண்டு அணிகளுக்கும் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும். ரசிகர்களே விளையாட்டு ஒன்றினதும், வீரர் ஒருவரினதும் உயிர் நாடியாக இருக்கின்றனர். அவர்கள் அணிகளுக்கு வழங்கும் ஆதரவு, அணிகள் தங்களது மிகச்சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த பிரதான காரணமாக இருக்கின்றது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் கராச்சியில் ஒருநாள் போட்டி ஒன்று இடம்பெறவுள்ளதால் அங்கே வரலாற்று சம்பவம் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த வரலாற்று சம்பவத்தில் பங்கேற்க உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களை நான் அழைக்கின்றேன். இதனை காண வரும் ரசிகர்கள் எதிர்கால சந்ததிகளிடம் கராச்சியில் வரலாற்றுபூர்வமிக்க சர்வதேச தொடர் ஒன்று இடம்பெறும் போது நாமும் அங்கே இருந்தோம் என கூற முடியும்.

மேலும் பேசியிருந்த சர்பராஸ் அஹ்மட் தனது சொந்த நாட்டு மக்களுக்கு முன் தனது தரப்பினை வழிநடாத்துவது தனது கிரிக்கெட் வாழ்நாளில் தான் அடைந்து கொண்ட மிகச் சிறந்த விடயம் எனத் தெரிவித்திருந்தார். 

பாகிஸ்தான் செல்லும் இலங்கை ஒருநாள் T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட்…….

பாகிஸ்தான் அணியியை நடைபெறவுள்ள இருதரப்பு ஒருநாள் தொடரில் எனது சொந்த மக்களுக்கு முன் வைத்து தலைமை தாங்குவது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையான ஒரு விடயம்.

இந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியின் உப தலைவராக செயற்படவுள்ள பாபர் அசாம், உப தலைவராக பாகிஸ்தானின் சொந்த மைதானத்தில் வைத்து செயற்படும் நாள் தனது வாழ்நாளில் மிகச் சிறந்த நாள் எனத் தெரிவித்திருந்தார். 

”முன்னைய நாட்களில் எனது ரசிர்கள் எனக்கு வழங்கிய ஆதரவிற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அத்தோடு வெள்ளிக்கிழமை நான் பாகிஸ்தான் அணியின் உப தலைவராக வரவிருப்பதால் குறித்த நாள் எனது வாழ்க்கையில் வரும் சிறந்த நாட்களில் ஒன்றாக இருக்கவுள்ளது. குறித்த நாளினை எனது நாட்டு மக்களும், மைதானத்திற்கு வரும் பார்வையாளர்களும் நினைவுக்கு உரிய ஒன்றாக மாற்ற வேண்டும்.” 

இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரிற்கு முன்னர் பாகிஸ்தானில் முழுமையான இருதரப்பு தொடர் ஒன்று இடம்பெற்றது 2015ஆம் ஆண்டிலேயாகும். ஒருநாள், T20 போட்டிகள் கொண்ட குறித்த இருதரப்பு தொடரில் பாகிஸ்தானுடன் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி மோதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<