சிங்கர் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கான இரண்டு நாட்கள் கொண்ட டிவிஷன் 3 கிரிக்கெட் போட்டியில் நேற்று (24) நிறைவுற்ற யாழ். இந்துக் கல்லூரி அணிக்கு எதிரான போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான டிவிஷன் 3 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில், நிலை ஒன்று அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் யாழ். இந்துக் கல்லூரி அணிகள் மோதின. இந்தப் போட்டி கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை (23) நடைபெற்றது.
ஆனந்தா கல்லூரியை வீழ்த்தி சிவகுருநாதன் கிண்ணத்தை வென்ற யாழ் இந்து
கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு…
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய அந்த அணி வெறும் 46 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறிய நிலையில், கொக்குவில் இந்துக் கல்லூரி அணியின் எஸ். தினேஷ்குமார் 4 விக்கெட்டுகளையும், நிமலதாஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி எஸ். தினேஷ்குமாரின் அபாரமான ஆட்டத்தின் உதவியுடன் 179 ஓட்டங்களை குவித்தது. எஸ்.தினேஷ்குமார் 84 ஓட்டங்களை குவிக்க, அவருக்கு அடுத்தப்படியாக ஜனாதனன் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். யாழ். இந்துக் கல்லூரி அணிசார்பில் கோமேந்திரன் 4 விக்கெட்டுகளையும், கஜன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 133 ஓட்டங்கள் பின்னடைவில் இருந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். இந்துக் கல்லூரி அணி மீண்டும் துடுப்பாட்டத்தில் தடுமாறி 83 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
வெற்றியின் எதிர்பார்ப்புடன் பாகிஸ்தான் சென்றது இலங்கை அணி
பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி, அதிக இளம் வீரர்களை கொண்டிருந்தாலும்…
யாழ். இந்துக் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் கொமேந்திரன் அதிகபட்சமாக 26 ஓட்டங்களை பெற்றக்கொள்ள, எஸ். கஜனன் 6 விக்கெட்டுகளையும், நிமலதாஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
போட்டி சுருக்கம்
யாழ். இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 46 (33.3) எஸ். தினேஷ் குமார் 4/1, நிமலதாஸ் 3/15,
யாழ். இந்துக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 83 (45.1) கோமேந்திரன் 26, எஸ். கஜனன் 6/32, நிமலதாஸ் 2/11
கொக்குவில் இந்துக் கல்லூரி 179 (71.1) எஸ். தினேஷ் குமார் 84, எஸ்.ஜனாதனன் 31, கொமேந்திரன் 4/25, கஜன் 3/39
முடிவு – கொக்குவில் இந்துக் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 50 ஓட்டங்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க