ஸ்பெயினின் லா லிகா, பிரான்ஸின் லீக் 1 மற்றும் ஜெர்மனியின் புன்டஸ்லிகா தொடர்களின் முக்கிய மூன்று போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (23) அதிகாலை இடம்பெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,
ரியல் மெட்ரிட் எதிர் செவில்லா
லா லிகா தொடரில் தோல்வியுறாத ஆரம்பத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் ரியல் மெட்ரிட் அணி செவில்லா அணியுடனான போட்டியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
மெஸ்ஸி திரும்பியபோதும் அறிமுக அணியிடம் பார்சிலோனா தோல்வி
ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சிரி A தொடர்களின் ……
கடந்த புதனன்று இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக் தொடரின் ஆரம்ப போட்டியில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்ற ரியல் மெட்ரிட், செவில்லாவின் சொந்த மைதானமான ரமோன் சான்சஸ் பிஸ்ஜுவானில் அந்த அணியை எதிர்கொண்டது.
எனினும், முதல் பாதி ஆட்டத்தில் ஈடன் ஹசார்ட் குறுகிய தூரத்தில் உதைத்த பந்தை செவில்லா கோல்காப்பாளர் தோமஸ் விக்ரிக் தடுத்ததன் மூலம் ரியல் மெட்ரிட் அணியின் முதல் பாதியில் முன்னிலை பெறும் வாய்ப்பு தவறியது.
மறுபுறம் செவில்லாவின் ஜேவியர் ஹெர்னான்டஸ் பெற்ற கோல் ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், 64 ஆவது நிமிடத்தில் கர்வஜால் பரிமாற்றிய பந்து மேலால் பறந்து வந்தபோது கரிம் பென்சமா வேகமாக தலையால் முட்டி கோலாக மாற்றினார். அதுவே ரியல் மெட்ரிட்டின் வெற்றி கோலாகவும் இருந்தது.
இதன்படி இதுவரை ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றியீட்டி இருக்கும் ரியல் மெட்ரிட் லா லிகா புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் லியோன்
நெய்மார் பிந்திய நேரத்தில் பெற்ற மற்றொரு கோல் மூலம் லீக் 1 நடப்புச் சம்பியன் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி லியோனுக்கு எதிரான போட்டியில் 1-0 என வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
போட்டி முடிவதற்கு மூன்று நிமிடங்கள் மாத்திரமே இருக்கும்போது பிரேசில் முன்கள வீரரான நெய்மார் திறமையாக பந்தை கடத்தி வந்து கோல் கம்பத்தின் கீழ் மூலையினால் பந்தை வலைக்குள் நுழைத்தார். இதன்போது அவர் நான்கு பின்கள வீரர்களை முறியடித்து லியோன் கோல் காப்பாளர் அன்தோனியோ லோபஸை மீறி பந்தை வலைக்குள் செலுத்தினார்.
முன்னதாக கடந்த வாரம் தனது சொந்த ரசிகர்களே அரங்கத்தில் நையாண்டி கோசம் எழுப்பிய நிலையில் நெய்மார் 92 ஆவது நிமிடத்தில் வைத்து கோல் ஒன்றை பெற்று PSG அணியை வெற்றிபெறச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
நெய்மர் மீண்டும் பார்சிலோனா திரும்புவது தொடர்பில் கட்டாயப்படுத்தப்பட்ட சூழலில் அவர் முதல் ஐந்து போட்டிகளிலும் PSG அணிக்காக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருசியா டோர்ட்முண்ட் எதிர் எயின்ட்டிரச் பிராங்பேர்ட்
டோர்ட்முண்டின் மைக்கல் டெலானி கடைசி நேரத்தில் விட்டுக்கொடுத்த ஓன் கோல் காரணமாக எயின்ட்டிரச் பிராங்பேர்ட் அணிக்கு எதிரான போட்டியை அந்த அணி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக்கொண்டது.
தோல்வி காணாத பயணத்தில் லிவர்பூல்: மன்செஸ்டர் யுனைடட் ஏமாற்றம்
இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய மூன்று ……
வார நடுப்பகுதியில் நடந்த சம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவுக்கு எதிராக கோலின்றி சமநிலை செய்த டோர்ட்முண்ட், பிராங்பேர்ட்டில் நடந்த போட்டியை சமன் செய்ததன் காரணமாக புன்டஸ்லிகா புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் எக்செல் விட்சல் மூலம் கோல் பெற்று முன்னிலை பெற்ற டோர்ட்முண்ட் எதிரணிக்கு தொடர்ந்து சவால் விடுத்தபோதும் 43ஆவது நிமிடத்தில் அன்ட்ரே சில்வா பதில் கோல் திருப்பினார்.
எனினும், இரண்டாவது பாதியில் இங்கிலாந்தின் பதின்ம வயது வீரர் ஜோர்டன் சான்சோ 66 ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் உதவியோடு டோர்ட்முண்ட் மீண்டும் போட்டியில் முன்னிலை பெற்றது.
டோர்ட்முண்ட் தனது வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்த வேளை எயின்ட்டிரச் வீரர் கமடா உதைத்த பந்தை டெலானி தடுக்க முயன்றபோது அது ஓன் கோலாக மாறியது.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<