2020 SAFF சம்பியன்ஷிப் பங்களாதேஷில்: தொடர்ந்து புறக்கணிக்கும் இலங்கை

174
No SAFF events

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன கிண்ண கால்பந்தாட்டத் தொடரை (SAFF சம்பியன்ஷிப்) பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷுக்கு வழங்குவதற்கு தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.   

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த நிர்வாக சபைக் கூட்டம் கடந்த புதன்கிழமை (17) மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள வெஸ்டின் ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கை அணி சிறந்த நுட்பத்துடன் ஆடியது – யுங் ஜொங் சு

தமக்கு எதிராக இலங்கை கால்பந்து அணி வீரர்கள் சிறந்த ……

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும், பங்களாதேஷ் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான காசி சலாஉதின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தெற்காசியாவைச் சேர்ந்த 6 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டன

அத்துடன், ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன அங்கத்தவர்களின் சங்கம் மற்றும் அதன் உறுப்பு சங்கங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மூன்று பேரும் இதில் கலந்துகொண்டனர். இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா கலந்துகொண்டார்.  

இந்தக் கூட்டத்தின் போது பிராந்திய ரீதியில் கால்பந்தாட்ட விளையாட்டை அபிவிருத்தி செய்வது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டது. அதுதொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிராந்திய மற்றும் உள்ளூர் மட்டத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள போட்டித் தொடர்கள் மற்றும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு அறிக்கை என்பவற்றின் ஊடாக ஒதுக்கவுள்ள பணம் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தின் போது அதிக அவதானம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, அடுத்த வருடம் நடைபெறவுள்ள போட்டிகளில் முக்கிய இடத்தை வகிக்கின்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் (SAFF Championship) போட்டித் தொடருக்கு இதன்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு பல விடயங்கள் பேசப்பட்டன

இதன்படி, அடுத்த வருடம் பாகிஸ்தானில் தெற்காசிய கால்பந்தாட்டத் தொடர் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தாலும், பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திக் கொண்டு அந்தத் தொடரை மீண்டும் பங்களாதேஷில் நடத்துவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது

இதேநேரம், அடுத்த வருடம் பிராந்திய ரீதியில் வயது அடிப்படையில் நடைபெறவுள்ள போட்டித் தொடர்கள் குறித்த அறிவிப்பும் இதன்போது வெளியிடப்பட்டன. எனினும், போட்டிகள் நடைபெறுகின்ற இடங்கள் குறித்து எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் வரமுடியாமல் போனது

ஆடுத்த வருடம் இடம்பெறவுள்ள SAFF சம்பியன்ஷிப் தொடர்கள்

  • 15 வயதின்கீழ் பெண்களுக்கான SAFF சம்பியன்ஷிப் – ஆகஸ்ட் 
  • 18 வயதின்கீழ் பெண்களுக்கான SAFF சம்பியன்ஷிப் – செப்டம்பர் / ஒக்டோபர் 
  • 15 வயதின்கீழ் ஆண்களுக்கான SAFF சம்பியன்ஷிப் – ஒக்டோபர்

எனினும், 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டித் தொடரொன்றை நடத்துவதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் முன்வராமை கவலையளிப்பதாக இந்நாட்டு கால்பந்து விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.  

முதல் முறை SAFF U18 போட்டிகளுக்காக நேபாளம் சென்றுள்ள இலங்கை அணி

நேபாளத்தில் நாளை (20) ஆரம்பமாகவுள்ள 18 வயதுக்குட்பட்ட ……

அதேபோல, நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டிகள் அடிக்கடி நடைபெற்றாலும், இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து அசமந்தப் போக்குடன் நடந்து கொள்வது இந்நாட்டின் கால்பந்து விளையாட்டின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   

இதேநேரம், கடந்த சில வருடங்களாக பிராந்திய ரீதியில் நடைபெறுகின்ற முக்கியமான கால்பந்தாட்டத் தொடர்களில் இலங்கை சார்பாக எந்தவொரு அணியும் பங்குபெறாமைக்கான காரணத்தையும் இந்நாட்டு கால்பந்து அதிகாரிகள் இதுவரை முன்வைக்கவில்லை

இந்த நிலையில், நேபாளத்தில் இம்முறை நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட SAFF சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்கேற்கின்றது. இது, குறித்த தொடரில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் சந்தர்ப்பமாகும்.  

U-17 பெண்கள் கால்பந்து உலகக் கிண்ணம் இந்தியாவில்

சர்வதேச கால்பந்து சம்மேளத்தினால் …….

முன்னதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான SAFF சம்பியன்ஷிப் தொடர் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி பிற்போடப்பட்டதுடன், அதன்பிறகு குறித்த தொடரை நேபாளத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

எனவே, பிராந்திய ரீதியில் முக்கிய இடத்தை வகிக்கின்ற தெற்காசிய கால்பந்தாட்டத் தொடரொன்றையாவது இலங்கையில் நடத்துவதற்கு இந்நாட்டு அதிகாரிகள் ஏன் முன்வருவதில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது

இதற்கு பலரும் தமது அதிருப்தியினை வெளியிட்டு வருகின்றனர். இலங்கைக்கு கிடைக்கின்ற வாய்ப்பை மற்றுமொரு நாட்டுக்கு வழங்குகின்ற பழக்கத்தை எமது கால்பந்து அதிகாரிகள் இனிமேலும் நிறுத்தாவிட்டால் இலங்கையின் கால்பந்து விளையாட்டின் எதிர்காலம் இன்னும் இன்னும் அதாளபாதாளத்துக்குச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<