PSG இடம் வீழ்ந்தது ரியல் மெட்ரிட்

167

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் மேலும் சில முக்கிய போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (19) அதிகாலை இடம்பெற்றன. இதில் ரியல் மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி இலகு வெற்றியீட்டியதோடு அட்லெடிகோ மெட்ரிட் மற்றும் ஜுவன்டஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்றது. 

PSG எதிர் ரியல் மெட்ரிட்

தனது முன்னாள் அணி வீரரான ஏஞ்சல் டி மரியா, ரியல் மெட்ரிட்டுக்கு எதிராக இரட்டை கோல்களை புகுத்த சம்பியன்ஸ் லீக் தொடரை பிரான்ஸின் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. 

சம்பியன்ஸ் லீக்கை தோல்வியுடன் ஆரம்பித்த லிவர்பூல், செல்சி: போராடிய பார்சிலோனா

இந்த பருவகாலத்திற்கான ஐரோப்பிய ……..

PSG அணியின் சொந்த மைதானமான பரிஸில் அமைந்துள்ள பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தனது முன்னணி வீரர்களான கிலியன் ம்பாப்பே, நெய்மர் மற்றும் எடிசன் கவானி இன்றியே PSG களமிறங்கியது.  

எனினும் அந்த வீரர்கள் இல்லாத குறையை போக்கிய டி மரியா முதல் பாதியிலேயே தனது அணியை 2-0 என முன்னிலை பெறச் செய்தார். தொடரில் தனது 100 ஆவது போட்டியில் களமிறங்கிய அவர் 14 ஆவது நிமிடத்தில் குறுகிய தூரத்தில் இருந்து தனது முதல் கோலை புகுத்தினார்.  

தொடர்ந்து 33 ஆவது நிமிடத்தில் வைத்து 20 யார்ட் தூரத்தில் இருந்து அபார கோல் ஒன்றை பெற்றார் டி மரியா. ஆர்ஜன்டீன வீரரான 31 வயதுடைய டி மரியான 2010 தொடக்கம் நான்கு ஆண்டுகள் ரியல் மெட்ரிட்டுக்காக ஆடியமை குறிப்பிடத்தக்கது. 

மறுபுறம் ரியல் மெட்ரிட்டுக்காக தனது முதல் ஆரம்பத்தை பெற்ற ஈடன் ஹசார்ட் பந்தை சிறந்த முறையில் கையாண்டதை பார்த்தபோதும், அதனை கோலாக மாற்ற அவரால் முடியாமல்போனது.  

இந்நிலையில் போட்டி முடிவுறும் நேரத்தில் தோமஸ் மியுனியர் PSG அணிக்காக மூன்றாவது கோலை பெற்றார். எனவே, போட்டி நிறைவில் 3-0 என பரிஸ் தரப்பு வெற்றிபெற்றது. 

2016-18 காலப்பகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றதும் 2017-18 தொடர்களில் கடைசி 16 அணிகளில் இருந்த அணியுமான PSG யை வெளியேற்றியதுமான ரியல் மெட்ரிட் இந்த பருவத்தில் தனது முதல் தோல்வியை சந்தித்தது. 

ஜுவன்டஸ் எதிர் அட்லடிகோ மெட்ரிட்

ஜுவன்டஸ் அணிக்கு எதிராக D குழுவுக்காக நடந்த தனது சம்பியன்ஸ் லீக் முதல் போட்டியில் அட்லடிகோ மெட்ரிட் அணி கடைசி நிமிடத்தில் கோல் புகுத்தி போட்டியை 2-2 என சமநிலையில் முடித்தது.

அட்லடிகோ மெட்ரிட்டின் சொந்த மைதானமான வன்டா மெட்ரோபொலிடானோவில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டம் இழுபறியோடு நீடித்ததால் இரு அணியும் எந்த கோலையும் பெறவில்லை. 

ஆர்சனலை வியக்க வைத்த வட்போர்ட்

ஆர்சனல் அணிக்கு எதிராக 2-0 என பின்னிலையில் இருந்த ……

எனினும், இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே வருகை அணியான ஜுவன்டஸின் ஜுவான் குவட்ராடோ வேகமாக உதைத்து கோல் ஒன்றை பெற்றார். 65 ஆவது நிமிடத்தில் வைத்து பிளைஸ் மட்டுயிடி ஜுவன்டிஸின் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார். 

எனினும் ஐந்து நிமிடங்கள் கழித்து ஸ்டபான் சேவிக் எதிரணி பின்கள வீரர்களை முறியடித்து எதிர்ப்பு இன்றி கோல் திருப்பி அட்லடிக்கோவுக்கு நம்பிக்கை கொடுத்தார். 

இந்நிலையில் போட்டியின் முழு நேரம் முடிவதற்கு சற்று முன்னர் கிரன் டப்பியர் உதைத்த கோனர் கிக்கைக் தலையால் பெற்ற ஹெக்டர் ஹரேரா அதனை வலைக்குள் புகுத்தி போட்டியை சமநிலையில் முடித்தார். 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<