தேசிய கராத்தேவில் 8ஆவது தடவையாக பதக்கம் வென்ற பாலுராஜ் 

250

இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழா கராத்தே தோ போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜ் பாலுராஜ் தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார். தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டியில் பாலுராஜ் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்ட 8ஆவது பதக்கம் இதுவாகும்.

இரசிகர்கள் மூலம் சாதனை படைத்த 2019ஆம் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்

நடைபெற்று முடிந்த 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக்….

இந்த வெற்றியின் மூலம் இவ்வருட இறுதியில் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பையும் அவர் பெற்றுக் கொண்டார்

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 45ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கராத்தே போட்டிகள் பொலன்னறுவை முலுல்லே விஞ்ஞான பீட உள்ளக அரங்கில் நடைபெற்றது.   

இதில் ஆண்களுக்கான கராத்தே தோ போட்டியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட பாலுராஜ், தங்கப் பதக்கத்தை வென்றார். இவர் தேசிய விளையாட்டு விழாவில் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்ட 8ஆவது பதக்கம் இதுவாகும். இதில் 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என்பன உள்ளடங்கும்

இதற்குமுன் மூன்று தடவைகள் அதி சிறந்த வீரருக்கான விருதினையும் தட்டிச் சென்ற பாலுராஜ், கடந்த 2014, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களிலும் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil Interview with hatrick gold medal winner Saundarraja Baluraj

தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது….

இந்த நிலையில், தேசிய கராத்தே குழாத்தில் இடம்பெற்ற ஒரேயொரு தமிழ் பேசும் வீரராக 2017இல்  நடைபெற்ற 3ஆவது தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கத்தை வென்ற பாலுராஜ், எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமைய தேடிக்கொடுக்க காத்திருக்கின்றார்.

அவரது வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிலையில், காட்டா மற்றும் கராத்தோ தோ ஆகிய 2 பிரிவுகளிலும் இடம்பெற்ற காரத்தே தோ போட்டிகளின் ஆண்கள் பிரிவில் கிழக்கு மாகாண அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்த அணியில் ஷெரொன் சச்சின், எஸ்..எஸ் மொஹமட் மற்றும் எஸ். திசோபன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்

இதேநேரம், தேசிய விளையாட்டு விழா கராத்தே தோ போட்டிகளில் வருடத்தின் அதிசிறந்த ஆண் மற்றும் பெண் வீரர்களாக வடமேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவாகினர்

தேசிய விளையாட்டு விழா கராத்தேயில் பாலுராஜுக்கு அதி சிறந்த வீரர் விருது

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித்….

இதுஇவ்வாறிருக்க, ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப் பிரிவுக்கான குமிட்டோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டபிள்யூ.கே.ஆர் திசேரா அதி சிறந்த வீரராகத் தெரிவானார்

அத்துடன், பெண்களுக்கான 50 கிலோ கிராம் காட்டா பிரிவில் தங்கப் பதக்கத்தையும், அதே வயதுப் பிரிவுக்கான குமிட்டோவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த எச்..எச் ஹெட்டியாரச்சி சிறந்த வீராங்கனைக்கான விருதினைத் தட்டிச் சென்றார்.

இதுஇவ்வாறிருக்க, காட்டா மற்றும் கராத்தோ தோ ஆகிய 2 பிரிவுகளிலும் இடம்பெற்ற காரத்தே தோ போட்களின் ஆண்கள் பிரிவில் வடமேல் மாகாணம் சம்பியனாகத் தெரிவாக, மேல் மாகாணம் இரண்டாவது இடத்தையும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன

பெண்கள் பிரிவில் மேல் மாகாண அணி சம்பியன் பட்டத்தை வெற்றிகொள்ள, தென் மாகாணம் இரண்டாவது இடத்தையும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க