பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயவுள்ள ஐ.சி.சி

162
©GETTY IMAGES

பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடையில் இந்த மாத இறுதியில் பாகிஸ்தானில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளன.

இந்த தொடர்கள் ஆரம்பமாகவிருக்கும் பாகிஸ்தான் மண்ணில் இரு அணிகளுக்கும் நடுநிலையான போட்டி உத்தியோகத்தர்களை (Match Officials) நியமிக்க முன் அங்குள்ள பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்து  சர்தேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) ஆராய இருப்பதாக பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

பாகிஸ்தான் செல்லும் இலங்கை ஒருநாள் T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் தொடர்களில்…

கடைசியாக பாகிஸ்தான் மண்ணில் முழுமையான சர்வதேச தொடர் ஒன்று இடம்பெற்றது 2015 ஆம் ஆண்டிலாகும். ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகள் இடையில் இடம்பெற்ற இந்த தொடரின் போது ஐ.சி.சி. நடுநிலையான போட்டி உத்தியோகத்தர்களை நியமித்திருக்கவில்லை. 

ஆனால், சர்வதேச கிரிக்கெட் வாரியம் இம்முறை தொடருக்கு இரு நாடுகளும் அல்லாத நடுநிலையான போட்டி உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதன் மூலம் பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைமைககள் சிறப்பாக இருக்கின்றது என்பதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

எனினும், ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முன்னைய தொடர் போன்று ஐ.சி.சி. இம்முறையும் இரு நாடுகளினதும் சொந்த நடுவர்களை நியமிக்கும்பட்சத்தில் அது மறைமுகமாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்தன்மையை கேள்விக்குறியாக்கும் எனக் கருதப்படுகின்றது. 

எனவே, இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர்களின் போது ஐ.சி.சி. எப்படியான போட்டி உத்தியோகத்தர்களை நியமனம் செய்யும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

இது ஒருபுறமிருக்க இலங்கையின் பிரதமர் அலுவலகம் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின் போது இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் எனவும் எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கையை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை, தமது பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தினை மீள் பரிசீலனை செய்வதாக குறிப்பிட்டிருந்தது.  

இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் உத்தேச குழாம் அறிவிப்பு

இம்மாத இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை…

எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் பாகிஸ்தான் அல்லாத வேறு இடம் ஒன்றுக்கு மாற்றப்படாது என தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 27 ஆம் திகதி தொடக்கம், ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<