2018இல் தங்கம் வென்ற ரஸ்னி அஹமட்டுக்கு 2019இல் வெள்ளிப் பதக்கம்

182
Rasni Ahamed

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 89ஆவது ரிட்ஸ்பறி சிரேஷ்ட ஜோன் டார்பட் (பாடசாலைகள்) போட்டியின் மூன்றாவதும், இறுதியுமான நாளான இன்றைய தினம் (12) நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பொல்கஹவெல அல் – இர்பான் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ரஸ்னி அஹமட் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

சட்டவேலி ஓட்டத்தில் மன்னார் வீரர் அபிக்ஷனுக்கு வெள்ளிப் பதக்கம்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 89ஆவது ரிட்ஸ்பறி சிரேஷ்ட ஜோன் டார்பட் (பாடசாலைகள்)

சிரேஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டித் தொடரின் 2019ஆம் ஆண்டுக்கான அதிவேக வீரர்களைத் தெரிவு செய்கின்ற 18 வயதுப் பிரிவின்கீழ் 100 மீற்றர் ஓட்ட இறுதிப் போட்டிகள் இன்று (12) மாலை நடைபெற்றன

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கலந்துகொண்ட பொல்கஹவெல அல்இர்பான் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ரஸ்னி அஹமட் வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 11.04 செக்கன்களில் ஓடி முடித்தார்.  

இந்தப் போட்டியில் கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி மாணவன் டி. குலசிங்க 10.92 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தையும், கொழும்பு லும்பினி கல்லூரியின் சலித் பியூமால் (11.07 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

முன்னதாக, கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட ரஸ்னி அஹட்டுக்கு 5ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது

இதுஇவ்வாறிருக்க, கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் போட்டியிட்ட ரஸ்னி அஹமட், முதற்தடவையாக தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.   

குறித்த போட்டியை 11.16 செக்கன்களில் நிறைவுசெய்து, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதலாவது பதக்கத்தையும் அவர் தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்றைய போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு ரஸ்னி அஹமட் வழங்கிய செவ்வியில், ”ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டியில் கலந்துகொண்டு முதல்தடவையாக வெற்றி பெற கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது

அதிலும் குறிப்பாக, எனது பாடசாலையான அல்இர்பான் மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எனது தற்போதைய பயிற்சியாளரான சுனேத்திரா ஆசிரியைக்கும், முன்னாள் பயிற்சியாளரான விஜேதுங்க ஹெட்டியாரச்சி ஆசிரியருக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.  

ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் யாழ். மகாஜனாவின் கேதுஷன், ஐங்கரனுக்கு முதல் தங்கம்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 89 ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட

அத்துடன் சிறுவயது முதல் இன்றுவரை படிப்பைப் போல மெய்வல்லுனர் துறையிலும் என்னை ஆர்வத்துடன் பங்கேற்பதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற எனது பெற்றோறையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்

அத்துடன், என்னை இங்கு அழைத்து வந்து, எனது வினையாட்டுத்துறை வாழ்க்கைக்கு என்றும் துணையாக இருக்கின்ற எனது தயாருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்வதும், ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டுக்கு பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுப்பதும் தனது குறிக்கோளாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இம்முறை .பொ. சாதாரண தர பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள ரஸ்னி அஹமட், அடுத்த மாதம் நடைபெறவுள்ள அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் பதக்கமொன்றை வெற்றி கொள்ளும் முனைப்புடன் உள்ளார்.

 மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க