CPL தொடரில் விளையாடும் வாய்ப்பை இழக்கும் டிக்வெல்ல, திசர?

164
Dickwella and Thisara

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்வதை தவிர்த்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் திசர பெரேரா ஆகியோருக்கு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் (CPL) விளையாட முடியாது என தெரவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் செல்லும் இலங்கை ஒருநாள் T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவிருக்கும்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் T20I  தொடர்கள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன. இந்த தொடர்களுக்கான அணி விபரங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னர், இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் தொடரிலிருந்து விலகியிருந்தனர்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் T20I  போட்டிகளுக்கான தலைவர் லசித் மாலிங்க ஆகியோர் உட்பட 10 வீரர்கள் குறித்த தொடரில் இருந்து விலகியிருந்தனர். இதில், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் திசர பெரேரா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த நிலையில், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் திசர பெரேரா ஆகியோர் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கான அனுமதியை இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரியிருந்த நிலையில், அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திசர பெரேரா 2017ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட T20i  தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டிருந்தார். அத்துடன், பாகிஸ்தானுடன் நடைபெற்ற உலக பதினொருவர் அணிக்கான போட்டித் தொடரிலும் வியைாடியிருந்தார்.

இவ்வாறு, திசர பெரரா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் பாகிஸ்தான் தொடரை மறுத்துள்ள நிலையில், அவர்களுக்கான கரீபியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில், திசர பெரேரா ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள நிலையில், எதிர்வரும் 15ம் திகதியுடன் அவர் நாட்டுக்கு திரும்புவதுடன், அணியின் பயிற்சிகளில் இணைய வேண்டும் என கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ஒருநாள் மற்றும் T20I அணிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த குழாத்திலிருந்து இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன, லசித் மாலிங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், அகில தனன்ஜய, அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் விலகியிருந்தனர்.

பாகிஸ்தானில் பாதுகாப்பை மீளாய்வு செய்ய அரசின் உதவியை நாடும் இலங்கை கிரிக்கெட் சபை

பாகிஸ்தானுக்கான இலங்கை தேசிய அணியின் திட்டமிடப்பட்டிருக்கும் சுற்றுப்பயணத்திற்கு…

அத்துடன், இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவர் திமுத் கருணாரத்னவுக்கு பதிலாக லஹிரு திரிமான்னே ஒருநாள் போட்டிகளின் தலைவராகவும், T20i  போட்டிகளுக்கான தலைவராக லசித் மாலிங்கவுக்கு பதிலாக தசுன் ஷானகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தானில் வைத்து இலங்கை அணியின் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், பாகிஸ்தானின் பாதுகாப்பினை மீளாய்வு செய்யுமாறும் பிரதமர் காரியாலயம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு நேற்று (11) அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<