Home Tamil இளையோர் ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

இளையோர் ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

162

இந்தப் பருவகாலத்திற்கான இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தமது முதல் போட்டியில் நேபாளத்தினை எதிர்கொண்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி டக்வெத் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை சிறந்த முறையில் ஆரம்பித்துள்ளது. 

நான் இலங்கை அணிக்கு ஆடுவேன் என்ற போது அனைவரும் சிரித்தனர் – சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராக செயற்பட்டிருக்கும் குமார் சங்கக்கார, சர்வதேச

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் குழு B மோதலாக அமைந்த இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (6) தொடங்கியது. இப்போட்டியில் மழையின் குறுக்கீடு இருந்ததன் காரணமாக ஆட்டம் அணிக்கு 42 ஓவர்கள் கொண்டதாக இடம்பெற்றது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற, நேபாள 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைவர் றோஹிட் பௌடேல், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தேர்வு செய்து கொண்டார்.  

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய நேபாள 19 வயதுக்குட்பட்ட அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.  

அவ்வணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த றிட் கௌதம் அரைச்சதம் தாண்டி 54 ஓட்டங்களை குவிக்க, அணியின் தலைவர் ஹோஹிட் பௌடேல் 47 ஓட்டங்களை குவித்திருந்தார். 

இளையோர் ஆசியக் கிண்ண முதல்நாளில் இந்திய, ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி

19 வயதின் கீழ்ப்பட்ட ஆசிய கிரிக்கெட் அணிகளுக்கான 2019ஆம் ஆண்டுக்கான

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பாக காலி மஹிந்த கல்லூரியின் நவோத் பரணவிதான மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர். 

இதன் பின்னர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக டக்வெத் லூயிஸ் முறையில் 42 ஓவர்களில் 159 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு றோயல் கல்லூரியின் கமில் மிஷார ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்து அரைச்சதம் பெற்றுக் கொடுத்தாார். 

கமில் மிஷாரவின் அரைச்சதத்தோடு போட்டியின் வெற்றி இலக்கினை இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 33.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களுடன் அடைந்தது. 

இலங்கை வீரர்களுக்கு மின்னொளியில் அதிக பயிற்சி கொடுங்கள் – மாலிங்க

நியூசிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு T20i போட்டிகளிலும் வெற்றியின் விளிம்புவரை சென்று

அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கமில் மிஷார 62 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதேநேரம், அஹான் விக்கிரமசிங்கவும் 30 ஓட்டங்களை பெற்று இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில் நேபாள 19 வயதுக்குட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப் பந்துவீச்சாளரான ரஷீட் கான் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது. 

நேபாளத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் அடுத்ததாக ஐக்கிய அரபு இராச்சிய 19 வயதுக்குட்பட்ட அணியினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (8) MCA மைதானத்தில் வைத்து எதிர்கொள்கின்றது. 

போட்டியின் சுருக்கம் 

Result


Sri Lanka U19
159/5 (33.4)

Nepal U19
159/9 (42)

Batsmen R B 4s 6s SR
Rit Gautam c Dilshan Madusanka b Navod Paranavithana 54 85 4 0 63.53
Pawan Sarraf c Kamil Mishara b Dilshan Madusanka 4 13 0 0 30.77
Mahamad Asif Sheikh b Dilshan Madusanka 7 12 1 0 58.33
Rohit Kumar Paudel c & b Ashian Daniel 47 80 1 0 58.75
Hari Bahadur Chauhan run out (Nipun Dananjaya) 12 23 1 0 52.17
Bhim Sharki lbw b Navod Paranavithana 1 2 0 0 50.00
Kushal Malla c Rohan Sanjaya b Navod Paranavithana 2 8 0 0 25.00
Rasid Khan not out 15 22 0 1 68.18
Kamal Singh Airee b Rohan Sanjaya 2 5 0 0 40.00
Sagar Dhakal b Dilshan Madusanka 1 4 0 0 25.00
Surya Tamang not out 1 1 0 0 100.00


Extras 13 (b 1 , lb 1 , nb 4, w 7, pen 0)
Total 159/9 (42 Overs, RR: 3.79)
Fall of Wickets 1-16 (4.4) Pawan Sarraf, 2-24 (6.5) Mahamad Asif Sheikh, 3-115 (29.1) Rit Gautam, 4-135 (34.4) Rohit Kumar Paudel, 5-137 (35.1) Hari Bahadur Chauhan, 6-137 (35.2) Bhim Sharki, 7-142 (37.5) Kushal Malla, 8-149 (40.1) Kamal Singh Airee, 9-158 (41.4) Sagar Dhakal,

Bowling O M R W Econ
Dilshan Madusanka 8 1 23 3 2.88
Amshi De Silva 4 0 28 0 7.00
Rohan Sanjaya 9 0 27 1 3.00
Chamindu Wijesinghe 4 0 18 0 4.50
Ashian Daniel 8 0 35 1 4.38
Navod Paranavithana 9 0 26 3 2.89


Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Hari Bahadur Chauhan b Rasid Khan 12 11 1 1 109.09
Kamil Mishara c Bhim Sharki b Rasid Khan 55 62 3 2 88.71
Ravindu De Silva b Sagar Dhakal 15 15 1 1 100.00
Ahan Wicrkamasinghe c Bhim Sharki b Pawan Sarraf 30 36 2 0 83.33
Nipun Dananjaya c Mahamad Asif Sheikh b Kamal Singh Airee 18 31 1 0 58.06
Avishka Tharindu not out 25 44 1 1 56.82
Chamindu Wijesinghe not out 1 3 0 0 33.33


Extras 3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0)
Total 159/5 (33.4 Overs, RR: 4.72)
Fall of Wickets 1-22 (4.4) Navod Paranavithana, 2-53 (9.5) Ravindu De Silva, 3-155 (12.2) Nipun Dananjaya, 4-113 (20.1) Kamil Mishara, 5-115 (21.1) Ahan Wicrkamasinghe,

Bowling O M R W Econ
Pawan Sarraf 9 1 28 1 3.11
Kamal Singh Airee 5 0 32 1 6.40
Rasid Khan 6.4 0 21 2 3.28
Sagar Dhakal 8 0 49 1 6.12
Surya Tamang 4 0 20 0 5.00
Kushal Malla 1 0 7 0 7.00



முடிவு – இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி டக்வெத் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

Photos: Sri Lanka Vs Nepal | Under 19 Asia Cup 2019

ஐக்கிய அரபு இராச்சியம் எதிர் பங்களாதேஷ்

கொழும்பு MCA மைதானத்தில் இடம்பெற்ற குழு B அணிகளுக்கான மற்றுமொரு மோதலில் ஐக்கிய அரபு இராச்சியம், பங்களாதேஷ் ஆகியவற்றின் 19 வயதுக்குட்பட்ட அணிகள் மோதின. 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆசியக் கிண்ண மோதலில், டக்வெத் லூயிஸ் முறையில் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கும் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கின்றது. 

போட்டியின் சுருக்கம் 

ஐக்கிய அரபு இராச்சியம் – 127 (28) ஒசாமா ஹஸன் 57, அலிஷான் சரபு 34, றகிபுல் ஹஸன் 25/3, ஹன்சிம் ஹஸன் 36/3

பங்களாதேஷ் – 128/4 (21.3) டன்ஸித் ஹஸன் 45, பர்வேஸ் ஹொசேன் ஈமோன் 30, றிசாப் முகர்ஜி 2/72

முடிவு – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்) 

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க