T20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறார் மிதாலி ராஜ்

171
©ICC

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியாக செயற்பட்டு வந்த மிதாலி ராஜ், T20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று (03) அறிவித்துள்ளார்.

மிதாலி ராஜ் T20  போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடுவார் என இந்திய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பும்ராவின் சாகசத்தில் டெஸ்ட் தொடரையும் வைட்வொஷ் செய்த இந்தியா

ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிகெட் சுற்றுப் பயணம் ……..

இந்திய மகளிர் அணியின் அனுபவமிக்க வீராங்கனையான மிதாலி ராஜ், இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, 32 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமாத்திரமின்றி, 2012, 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றிருந்த மகளிருக்கான T20  உலகக் கிண்ணத் தொடர்களுக்கான இந்திய மகளிர் அணியை இவர் வழிநடத்தியிருந்தார்.

அதேநேரம், 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மகளிர் அணிக்கான  முதல் T20 போட்டியின் அணித் தலைவியாக, மிதாலி ராஜ் செயற்பட்டதுடன், குறித்தப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை, இந்திய அணி வெற்றிகொண்டிருந்தது.

மிதாலி ராஜ் இதுவரையில், 89 மகளிர் T20  போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 37.62 என்ற ஓட்ட சராசரியில் 2364 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில், தன்னுடைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ள இவர், T20 போட்டிகளில் 17 அரைச் சதங்களையும் விளாசியுள்ளார்.

இதேவேளை, மிதாலி ராஜ் பெற்றுள்ள 2364 என்ற ஓட்ட எண்ணிக்கையானது, இந்திய மகளிர் அணி வீராங்கனை ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய T20 ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளதுடன், 2000 ஓட்டங்களை கடந்த முதல் இந்தியர் (ஆடவர் மற்றும் மகளிர்) என்ற பெருமையையும் இவர் பெற்றிருந்தார்.

தன்னுடைய ஓய்வு குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் மிதாலி ராஜ், 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடரை கருத்திற்கொண்டு T20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மிதாலி ராஜ் கூறியதாவது,

“இந்திய மகளிர் அணிக்காக 2006 ஆம் ஆண்டு T20 போட்டிகளில் அறிமுகமாகியிருந்த நான், இன்றுடன் T20 போட்டிகளுடன் விடைபெற்றுக் கொள்கிறேன். அதேநேரம், 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிருக்கான உலகக் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடி நாட்டுக்கு உலகக் கிண்ணம் ஒன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எனது எண்ணம். அதற்காகவே T20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறேன்.

உஸ்மான் கவாஜாவை நீக்கிய அவுஸ்திரேலிய

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது ……..

எனது T20 கிரிக்கெட்டுக்கு ஆதரவாக இருந்த இந்திய கிரிக்கெட் சபைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் T20 தொடரில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடுவதற்கு எனது வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்” என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<