ஓட்டமாவடி ஹீரோ லயன்ஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்த ஹீரோ T10 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (30) ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.
அபிஷேக், எபனேசர் அசத்த யாழ் மத்தியை இலகுவாக வென்ற சென் ஜோன்ஸ்
யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட்….
அந்தவகையில் இந்த ஹீரோ T10 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டுக் கழகம் றோயல் விளையாட்டுக் கழகத்தினை 12 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்த ஹீரோ T10 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் கல்குடா பிரதேசத்தை சேர்ந்த 24 கிரிக்கெட் கழகங்கள் இடையே நடைபெற்றிருந்தன. அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்தில் எட்டுக் குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெற்றன. பின்னர், தொடரின் காலிறுதி, அரையிறுதிச் சுற்றுகளுக்கு அமைவாக வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டுக் கழகமும் றோயல் விளையாட்டுக் கழகமும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
தொடர்ந்து இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டுக் கழக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் சார்பில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய பாஸில் வெறும் 24 பந்துகளில் 47 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேநேரம் றோயல் விளையாட்டுக் கழக அணியின் பந்துவீச்சு சார்பில் றிஸ்வான் 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 104 ஓட்டங்களை 10 ஓவர்களில் அடைய றோயல் விளையாட்டு கழக அணி களமிறங்கியது.
றோயல் விளையாட்டுக் கழகம் சிறந்த ஆரம்பத்தை காட்டிய போதிலும் அவ்வணியினால் 10 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதனால், 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்திடம் றோயல் விளையாட்டுக் கழக அணியினர் தோல்வியடைந்தனர்.
றோயல் விளையாட்டுக் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பாக சியாம் 38 ஓட்டங்களை பெற்று, தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்திருந்தார்.
இதேநேரம் அல்-அக்ஸா அணியின் பந்துவீச்சு சார்பில் பாயிக், சப்ரின், சம்ஹான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்ட நாயகனாக வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் துடுப்பாட்ட வீரரான பாஸில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்
போட்டியின் சுருக்கம்
அல்-அக்ஸா விளையாட்டுக் கழகம் – 103/6 (10) – பாஸில் 47, றிஸ்வான் 2/22, சப்ராஸ் 1/13, ஜஸீர் 1/13
றோயல் விளையாட்டுக் கழகம் – 91/4 (10) – சியாம் 38, பாயிக் 1/13, சப்ரின் 1/20, சம்ஹான் 1/21
முடிவு – அல்-அக்ஸா விளையாட்டுக் கழகம் 12 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<