இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் அரிய சாதனை படைத்த ஜலஜ் சக்சேனா

186
©BCCI

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட்டில் 6,000 ஓட்டங்களைக் குவித்து 300இற்கும் அதிகமான விக்கெட்டுக்களை வீழ்த்திய 19ஆவது வீரர் என்ற சாதனையை ஜலஜ் சக்சேனா படைத்துள்ளார். 

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த 32 வயதான சகலதுறை வீரரான ஜலஜ் சக்சேனா, தற்போது நடைபெற்றுவரும் துலீப் கிண்ண கிரிக்கெட் தொடரில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார்

85 வயதில் ஓய்வை அறிவித்த மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ….

இதில் இந்தியா ப்ளூ மற்றும் இந்தியா ரெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இந்திய ப்ளூ அணிக்காக விளையாடிய ஜலஸ் சக்சேனா, 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட்டில் 6000 ஓட்டங்களுடன் 300 விக்கெட்டுகள் எடுத்த 19ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்

இந்தப் பட்டியலில் சி.கே. நாயுடு, லாலா அமர்நாத் மற்றும் விஜய் ஹஸாரே ஆகிய வீரர்கள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன், கபில் தேவ் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் முறையே 14ஆவது, 15ஆவது இடங்களில் இடம்பெற்றுள்ளனர்

எனினும், குறித்த பட்டியலில் இடம்பெற்ற ஏனைய 18 வீரர்களும் இந்திய தேசிய அணிக்காக விளையாடியுள்ளமை சிறப்பம்சமாகும். ஆனால், இவருக்கு மட்டும் இதுவரை இந்திய அணிக்காகவோ அல்லது இந்திய அணிக்காகவோ விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கிட்டதட்ட 15 வருடங்கள் இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகின்ற சக்சேனா, முதல்தர போட்டியில் சாதனை படைத்தும், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத ஒரே வீரர் என்ற மோசமான அரிய வகை பதிவுக்கு சொந்தக்காரராகியுள்ளார். 

முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்துள்ள இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி ……

இவர் கடந்த நான்கு வருடங்களாக இந்திய கிரிக்கெட் பையினால் வழங்கப்படும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த சகலதுறை வீரருக்கான விருதையும் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

இதுவரை 113 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள ஜலஜ் சக்சேனா, 6,044 ஓட்டங்களையும், 305 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அத்துடன், துலீப் கிண்ணத்தில் சதமடித்து ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்களை 2 தடவைகள் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் இவர் நிகழ்த்தினார்

எனவே, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து பிரகாசித்து வருகின்ற சக்சேனாவுக்கு இன்னும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமை மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.  

மேலும், கடந்த வருடம் நடைபெற்ற .பி.எல் தொடரில் டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<