VANTAGE FA கிண்ண வடமராட்சி லீக் சம்பியனாகியது இமையாணன் மத்தி

201

VANTAGE FA கிண்ண கால்பந்து சுற்றுப் போட்டிகளின் வடமராட்சி லீக்குக்குரிய பரபரப்பான இறுதிப் போட்டியில் கரணவாய் கொலின்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இமையாணன் மத்தி அணி லீக் சம்பியனாக முடிசூடிஅடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது. 

இரு அணிகளின் ரசிகர் பட்டாளங்கள், வார்த்தை பரிமாற்றங்கள், வீரர்களின் ஆக்ரோஷமான விளையாட்டுடன் முதல்பாதி ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் கரணவாய் கொலின்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25)   ஆரம்பித்தது

எப்.ஏ கிண்ண காத்தான்குடி லீக் சம்பியனாக ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகம்

காத்தான்குடி விக்டோரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை…..

போட்டியின் ஆரம்பத்திலேயே பல இலகுவான வாய்ப்புக்களை இரு அணிகளும் தவறவிட முதல் முப்பது நிமிடங்களும் எந்தவித கோலும் பெறப்படாது ஆட்டம் நகர்ந்தது. போட்டியின் 36வது நிமிடத்தில் இமையாணன் மத்திக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை அவ்வணியின் நட்சத்திர வீரர் சுலக்ஷன் கோலாக்க ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது.

ஆட்டத்தை சமப்படுத்த கொலின்ஸ் அணியின் முன்கள வீரர்கள் முயன்ற போதும் இமையாணன் அணியின் பின்கள வரிசையின் அபாரமான தடுப்பாட்டத்தை மீறி கோல் பெற முடியவில்லை. அவ்வாறே முதல் பாதியாட்டம் நிறைவடைய இமையாணன் மத்தி அணியினர் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் இருந்தனர்.

முதல்பாதி ஆட்டம்: இமையாணன் மத்தி வி.க 1 – 0 கொலின்ஸ் வி.க

இடைவேளையின் பின் சில வீரர்களை பிரதியீடு செய்து புதிய வியூகங்களுடன் இரு அணிகளும் களமிறங்கின. போட்டியின் 55வது நிமிடத்தில் சுலக்ஷனின் நீண்ட தூர உதை ஒன்று காற்றைக்கிழித்துக்கொண்டு கொலின்ஸ் அணியின் கோல் காப்பாளரை தாண்டி கோல் கம்பத்தினுள் தஞ்சம் பெற இமையாணன் மத்தியின் கை ஓங்கியது.

Photos: Collins SC vs Central SC Vadamarachchi League Final Vantage FA Cup 2019

ThePapare.com | Murugaiah Saravanan | 26/08/2019 Editing and…

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொலின்ஸ் அணியின் பின்கள வீரரின் தவறை பயன்படுத்தி தமது அணிக்கானதும் தனக்கானதுமான மூன்றாவது கோலை சுலக்ஷன் பெற்றுக்கொடுக்க வெற்றித்தராசு இமையாணன் மத்திப்பக்கம் அதிகமாகவே சாய்ந்தது.

எனினும், விடாது போராடிய கொலின்ஸ் அணிக்கு ஆட்டம் நிறைவடைய பத்து நிமிடங்கள் இருக்கும் போது கிடைத்த தண்ட உதையை அவ் அணியின் அனுசாந் கோலாக மாற்றினார்

மேலும் தொடர்ந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்காமல் போகவே 3-1 எனும் கோல் கணக்கில் கொலின்ஸ் அணியை வீழ்த்தி இவ் வருட FA கிண்ண வடமராட்சி லீக் சம்பியனாக இமையாணன் மத்தி அணி முடிசூடிக்கொண்டது.

முழு நேரம்: இமையாணன் மத்தி வி.க 3 – 1 கொலின்ஸ் வி.க

கோல் பெற்றவர்கள்

இமையாணன் மத்தி வி.க – சுலக்‌ஷன் 36’, 55 & 67
கொலின்ஸ் வி.க – அனுசாந் -1 – 79”

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<