Home Tamil நிசங்கவின் சதத்துடன் ஒருநாள் தொடர் இலங்கை வளர்ந்துவரும் அணி வசம்

நிசங்கவின் சதத்துடன் ஒருநாள் தொடர் இலங்கை வளர்ந்துவரும் அணி வசம்

1637

உத்தியோகபூர்வற்ற இருதரப்பு கிரிக்கெட் தொடருக்காக பங்களாதேஷ் சென்றிருக்கும் இலங்கை வளர்ந்துவரும் அணிக்கும் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை வீரர்கள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. 

இலங்கையுடனான ஒருநாள் தொடரை தக்கவைத்த பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் அணிக்கும்….

தொடரின் முதல் போட்டியில் இலங்கை வளர்ந்துவரும் அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று (24) குல்னாவில் அமைந்துள்ள ஷேக் அபூ நாஸர் மைதானத்தில் நடைபெற்றது.  

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சரித் அசலங்க தலைமையிலான இலங்கை வளர்ந்துவரும் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியின் முதல் விக்கெட் 4ஆவது ஓவரிலேயே வீழ்த்தப்பட்டது. மொஹமட் நயிம் 6 ஓட்டங்களுடன் அரங்கம் திரும்பினார்

2ஆவது விக்கெட்டுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷைப் ஹஸ்ஸானுடன் இணைந்த அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் சான்டோ சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கினார். இருவரும் இணைப்பாட்டமாக 74 ஓட்டங்களை பகிர்ந்துகொண்ட வேளையில் அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் சான்டோ 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்

அதனை தொடர்ந்துவந்த யாஸிர் அலி 9 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். ஆனால் 4ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமானது பங்களாதேஷ் அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிப்பிற்கு வழிவகுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷைப் ஹஸ்ஸான், அபிப் ஹொஸைன் ஆகியோர் இணைப்பாட்டமாக 125 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.  

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷைப் ஹஸ்ஸான் 7 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் சதமடித்து மொத்தமாக 117 ஓட்டங்களை பெற்று 45ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்துவந்த விக்கெட் காப்பாளர் சாக்கிர் ஹஸன் அடுத்த ஓவரில் ஆட்டமிழக்க பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆடுகளத்தில் அபிப் ஹொஸைன் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களுடனும், யாஸின் அரபாத் 13 ஓட்டங்களுடனும் இருந்தனர்

இலங்கை வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சில் கலன பெரேரா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ரமேஸ் மெண்டிஸ், ஷிரான் பெர்ணான்டோ, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸ் முடிவில் மைதானத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டியானது 28 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

தனன்ஜயவின் சதத்தையும் தாண்டி ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து

கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில்….

அதன்படி இலங்கை வளர்ந்துவரும் அணியின் வெற்றியிலக்கு 199 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பெத்தும் நிசங்க, ஹசித்த போயகொட ஜோடி 64 ஓட்டங்களை குவித்தது. 12 ஓட்டங்களுடன் ஹசித்த போயகொட ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்துவந்த அணித்தலைவர் சரித் அசலங்க வெறும் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்

ஆனால் மூன்றாவது விக்கெட்டுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்கவுடன் இணைந்த மினோத் பானுக்க சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார். இருவரும் 3ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 122 ஓட்டங்களை பகிர்ந்துகொள்ள இலங்கை அணி வெற்றியின் பக்கம் சென்றது. அதிரடியாக ஆடிய மினோத் பானுக்க 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் அரைச்தம் கடந்து 55 ஓட்டங்களை பெற்று இறுதி நேரத்தில் ஆட்டமிழந்தார்

அதன் பின்னர் பெத்தும் நிசங்கவுடன் கமிந்து மெண்டிஸ் இணைந்துகொண்டார். நிதானமாகவும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க அணியின் வெற்றியை டக்வத் லூவிஸ் முறையில் 7 விக்கெட்டுக்களினால் உறுதி செய்தார். 78 பந்துகளை எதிர்கொண்ட பெத்தும் நிசங்க 5 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் சதம் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காது 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்

மாலிங்க தலைமையிலான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள…

மறுமுனையில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காது 5 ஓட்டங்களுடன் காணப்பட்டார். பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சில் யாஸின் அறபாத், அமினுல் இஸ்லாம் மற்றும் ரொபியுல் ஹக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக சதமடித்து அசத்திய பெத்தும் நிசங்க தெரிவானார்

இலங்கை வளர்ந்துவரும் அணியின் இவ்வெற்றியினால் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2–1 என்ற அடிப்படையில் இலங்கை வளர்ந்துவரும் அணி வசமானது. சுற்றுப்பயணத்தின் அடுத்த தொடரான இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வற்ற டெஸ்ட் தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) இதே மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

போட்டியின் ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka Emerging Team
199/3 (24)

Bangladesh Emerging Team
269/5 (50)

Batsmen R B 4s 6s SR
Saif Hassan c Charith Asalanka b Kalana Perera 117 130 4 7 90.00
Mohammad Naim c Ashen Bandara b Kalana Perera 6 12 1 0 50.00
Najmul Hossain Shanto c Hasitha Boyagoda b Ramesh Mendis 39 47 4 0 82.98
Yasir Ali c Jehan Daniel b Wanindu Hasaranga 9 24 0 0 37.50
Afif Hossain not out 68 70 6 1 97.14
Zakir Hasan c Wanindu Hasaranga b Shiran Fernando 7 7 1 0 100.00
Yeasin Arafat not out 13 11 1 0 118.18


Extras 10 (b 2 , lb 1 , nb 1, w 6, pen 0)
Total 269/5 (50 Overs, RR: 5.38)
Fall of Wickets 1-9 (3.6) Mohammad Naim, 2-83 (19.5) Najmul Hossain Shanto, 3-95 (24.5) Yasir Ali, 4-220 (44.2) Saif Hassan, 5-229 (45.5) Zakir Hasan,

Bowling O M R W Econ
Shiran Fernando 10 0 48 1 4.80
Kalana Perera 10 1 47 2 4.70
Jehan Daniel 6 0 48 0 8.00
Ramesh Mendis 10 0 44 1 4.40
Wanindu Hasaranga 10 0 58 1 5.80
Kamindu Mendis 4 0 21 0 5.25


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka not out 115 78 8 5 147.44
Hasitha Boyagoda b Aminul Islam 12 23 1 0 52.17
Charith Asalanka c Najmul Hossain Shanto b Robiul Haque 2 8 0 0 25.00
Minod Bhanuka b Yeasin Arafat 55 32 5 3 171.88
Kamindu Mendis not out 5 3 1 0 166.67


Extras 10 (b 0 , lb 4 , nb 0, w 6, pen 0)
Total 199/3 (24 Overs, RR: 8.29)
Fall of Wickets 1-64 (8.4) Hasitha Boyagoda, 2-68 (10.1) Charith Asalanka, 3-190 (22.6) Minod Bhanuka,

Bowling O M R W Econ
Shafiqul Islam 5 0 35 0 7.00
Yeasin Arafat 5 1 29 1 5.80
Nayeem Hasan 6 0 60 0 10.00
Robiul Haque 4 0 39 1 9.75
Aminul Islam 4 0 32 1 8.00



முடிவு இலங்கை வளர்ந்துவரும் அணி டக்வத் லூவிஸ் 7 விக்கெட்டுக்களினால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<