வேகப் பந்துவீச்சாளராக மாறிய மொயின் அலி

1988
@Getty Images

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான மொயின் அலி, தற்போது நடைபெற்றுவரும் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கின்றார்.

இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை 7 வருடங்களாக குறைப்பு

சூதாட்ட சர்ச்சையில் சிக்கி வாழ்நாள் தடைக்குள்ளாகிய….

இங்கிலாந்து அணிக்காக மத்திய வரிசையில் துடுப்பாடும் சகலதுறை வீரரான மொயின் அலி, இந்தப் பருவகாலத்திற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஜொலிக்க தவறியதன் காரணமாகவே இங்கிலாந்து குழாத்தில் ஆடும் வாய்ப்பினை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  மொயின் அலிக்கு பதிலாக இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் சுழல் பந்துவீச்சாளரான ஜேக் லீச்சிற்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.  

இங்கிலாந்து அணியில் இருந்து நீங்கிய நிலையில் தனக்கு சர்வதேச போட்டிகளில் குறிப்பிட்ட காலம் ஓய்வு வேண்டும் எனத் தெரிவித்த மொயின் அலி தற்போது கவுண்டி போட்டிகளில் தனது தாயக அணியான வோர்ஷஸ்டைரிற்காக விளையாடிவருகின்றார். 

இந்நிலையில் மொயின் அலி, கடந்த வாரம் நோர்த்தம்ப்டன்ஷைர் அணியுடன் மோதிய போட்டியில் மித வேகப் பந்துவீச்சாளராக செயற்பட்டு அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருக்கின்றார். பொதுவாக சுழற் பந்துவீச்சாளராகவே பந்துவீசும் மொயின் அலி, இவ்வாறு மித வேகப் பந்துவீச்சாளராக மாறியது அவர் தனது பந்துவீச்சுப் பாணியில் மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காக செய்யப்பட்ட முயற்சியாக கருதப்படுகின்றது.

மொயின் அலி அண்மைக்காலமாக சுழற் பந்துவீச்சாளராக ஜொலிக்க தவறியதே, அவர் தனது பந்துவீச்சுப் பாணியில் மாற்றம் மேற்கொள்ள காரணமாக இருக்கின்றது.  தனது கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 200 இற்கு கிட்டவான ஓட்டங்களை வாரி இறைத்திருக்கும் மொயின் அலி, குறித்த போட்டிகளில் மோசமான பந்துவீச்சு சராசரியுடன் வெறும் 4 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், மொயின் கவுண்டி போட்டிகளில் மித வேகப் பந்துவீச்சாளராக மாறியதும் அவருக்கு கைகொடுக்கவில்லை. நோர்த்தம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 39.1 ஓவர்களை வீசிய மொயின் அலி 126 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை மட்டுமே கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில், மொயின் அலி தனது முதல் விக்கெட்டினை 100 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த பின்னரே கைப்பற்றியிருந்தார். 

இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியில் டில்ருவான் பெரேரா

இலங்கை அணியின் அனுபவ சுழல் பந்துவீச்சு சகலதுறை..

இவ்வாறாக மொயின் அலி மித வேகப் பந்துவீச்சில் சிறப்பாக செயற்படாததனை அடுத்து தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு சுழற்பந்து சகலதுறை வீரராகவே இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பெறுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

மொயின் அலிக்கு முன்னதாக, 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் போட்டி ஒன்றின் போது  இலங்கை வீரர் சனத் ஜயசூரியவின் அதிரடி துடுப்பாட்டத்தின் காரணமாக இந்திய வேகப் பந்துவீச்சாளரான மனோஜ் பிராபகர் வேகப் பந்துவீச்சில் இருந்து சுழல்பந்துவீச்சினை தெரிவு செய்திருந்தார். மனோஜ் பிராபகர் இவ்வாறு வேகப் பந்துவீச்சில் இருந்து சுழல்பந்துவீச்சை தெரிவு செய்த குறித்த போட்டி அவரின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மொயின் அலியும் பந்துவீச்சுப் பாணியினை மாற்றியிருப்பதால் அவரது கிரிக்கெட் எதிர்காலமும் மனோஜ் பிராபகர் போன்று முடிவடைந்துவிடக்கூடாது என்பதே கிரிக்கெட் இரசிகர்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<