அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழில் முதல் முறையாக நடத்தப்பட்ட T10 கிரிக்கெட் தொடரின் சம்பியன் கிண்ணத்தை சென்றலைட்ஸ் அணியினர் சுவீகரித்துக்கொண்டனர்.
தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் கடந்த புதன்கிழமை யாழ் இந்தக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தன.
சரஸ்வதி T10 தொடரின் காலிறுதி முடிவுகள்
அரியாலை சரஸ்வதி சன சமூக நிலைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு…
முதலாவது அரையிறுதி போட்டியில் கொக்குவில் மத்தி அணியினை வெற்றிகொண்ட சென்றலைட்ஸ் அணியும், மற்றைய அரையிறுதிப் போட்டியில் ஜொலி ஸ்டார்ஸ் அணியினை வெற்றிகொண்ட ஏபி அணியும் இறுதி போட்டியில் மோதின.
இறுதிப் போட்டி
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த சென்றலைட்ஸ் அணிக்கு கௌதமன், ஜெனோஷன் இணை சிறப்பானதொரு ஆரம்பத்தினை வழங்கியது. ஜெனோஷன் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், தொடர்ந்து களத்திலிருந்த கௌதமன் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 34 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரையும் ஏபி அணியினர் ஒற்றை இலக்கத்துடன் ஆடுகளம் விட்டு வெளியேற்றி இருந்தனர். இருப்பினும் உதிரிகளாக 31 ஓட்டங்கள் கிடைக்கப்பெற சென்றலைட்ஸ் அணியினர் 97 ஓட்டங்களினை பெற்றுகொண்டனர்.
பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட பார்த்தீபன் 17 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.
>>Photos: Ariyalai Saraswathy Centenary Ten 10 League – Final<<
பின்னர் தமது இன்னிங்ஸை ஆரம்பித்த ஏபி அணியினரின் விக்கெட்டுக்கள் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டபோதும், மத்திய வரிசையில் கஜீபராஜின் அடுத்தடுத்த 2 ஆறு ஓட்டங்கள் மற்றும் லிங்கநாதனின் அதிரடி துடுப்பாட்டம் கைகொடுக்க ஏபி அணிக்கு வெற்றி இலக்கினை எட்டுவதற்கான வாய்ப்பு இருந்தது.
இறுதி ஒவேரில் ஏபி அணிக்கு வெற்றிக்கான 15 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில், அந்த ஒவரினை வீசுவதற்காக தசோபன் அழைக்கப்பட்டிருந்தார்.
முதலாவது பந்தில் 6 ஓட்டங்களை பெற்ற லிங்கநாதன் அடுத்த பந்தில் ஒரு ஓட்டத்தினை பெற்று மறு முனைக்கு சென்றார். ஒரு பந்தினை வீணடித்த சஜீ அடுத்த பந்தில் ஒரு ஓட்டத்தினை பெற்று லிங்கநாதனிற்கு வாய்ப்பினை வழங்கினார். இறுதி இரு பந்துகளிலும் எந்தவொரு ஒட்டத்தினையும் விட்டுக்கொடுக்காது தசோபன் ஓவரினை வீசி முடிக்க 6 ஓட்டங்களால் வெற்றி பெற்ற சென்றலைட்ஸ் அணியினர் யாழ் மாவட்டத்தின் முதலாவது T10 தொடரின் சம்பியன்களாக முடிசூடிக்கொண்டனர்.
போட்டி சுருக்கம்
சென்றலைட்ஸ் 97/9 (10) – கௌதமன் 34 ,பார்த்தீபன் 4/17
ஏபி 91/7 (10) – லிங்கநாதன் 22 ,ஜெரிக் 3/21
ஆட்டநாயகன் – கௌதமன் (சென்றலைட்ஸ் வி.க)
தொடர் நாயகன் – ஜெரிக் துசாந்த் (சென்றலைட்ஸ் வி.க)
>>Photos: Ariyalai Saraswathy Centenary Ten 10 League – Semi finals<<
அரையிறுதி போட்டிகள்
சென்றலைட்ஸ் எதிர் கொக்குவில் மத்தி
சென்றலைட்ஸ் 93/6(10) – ஜெனோசன் 55, துசியந்தன் 2/12
கொக்குவில் மத்தி 53/10 – சாம்பவன் 13, டார்வின் 3/7 , ஜெரிக் 3/14, ஜேம்ஸ் 2/7
போட்டி முடிவு – 40 ஓட்டங்களால் சென்றலைட்ஸ் அணி வெற்றி
ஆட்டநாயகன் – ஜெனோசன் (சென்றலைட்ஸ் வி.க)
ஜொலி ஸ்டார்ஸ் எதிர் ஏபி
ஜொலி ஸ்டார்ஸ் 101/4 (10) – சந்தோஷ் 42, அருண்குமார் 27, பார்த்தீபன் 2/26
ஏபி 102/6 (10) – ஆதித்தன் 29, ராகுலன் 17, லிங்கநாதன் 16, பிரசன்னா 3/11
போட்டி முடிவு – 4 விக்கெட்டுகளால் ஏபி அணி வெற்றி
ஆட்ட நாயகன் – ஆதித்தன் (ஏபி வி.க)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<