காலநிலை குறித்து அவதானம் செலுத்தும் கேன் வில்லியம்சன்

321

சவால்மிக்க சூழலில் இலங்கை அணியின் சவாலை எதிர்கொள்ளவிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் இலங்கையில் நிலவும் காலநிலைக்கு தயார் நிலையுடன் நாளை (14) முதல் டெஸ்ட் போட்டியில் ஆடத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை காலியில் ஆரம்பமாகவுள்ளது

“சொந்த மண்ணில் எம்மால் முடியாதது என ஒன்றுமில்லை” – மெதிவ்ஸ்

அவுஸ்திரேலியா போன்ற முன்னணி…

எனினும், தற்போது இலங்கையில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதனால் முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியுடன் நியூசிலாந்து ஆடிய மூன்று நாள் பயிற்சிப் போட்டியின் இரண்டு நாட்கள் மழையால் தடைப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணியினால் துடுப்பெடுத்தாட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது

நாம் இங்கு இருக்கும் 10 அல்லது 12 நாட்களில் எட்டு தினங்கள் மழையால் வீணானது. அந்த விடயம் குறித்து உளரீதியில் எம்மால் முடியுமான வரை தயார் நிலையில் இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டே நாளைய டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டிருக்கிறோம். டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் இந்த போட்டி நடைபெறுவது குறித்து அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர் என்று நாளைய டெஸ்ட் போட்டி குறித்து விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வில்லியம்சன் குறிப்பிட்டார்.     

.சி.சி. புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்காக முதல் முறையாகவே இந்த இரு அணிகளும் களமிறங்குகின்றன. குறிப்பாக, இந்த தொடரை முழுமையாக 2-0 என வெற்றிபெறும் பட்சத்தில், வெற்றிபெறும் அணி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு தொடருக்கு வழங்கப்படும் 120 புள்ளிகளையும் மொத்தமாக பெற்றுக்கொள்ளும்

தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கை எவ்வாறு சாதிக்கும்?

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு….

விளையாடும் எல்லா டெஸ்ட் போட்டிகளும் அதிக சவால் கொண்டதாக மாற்றுவதாக இந்த புதிய டெஸ்ட் வடிவம் உள்ளது. எல்லா நேரமும் எந்த அணியுடன் விளையாடுவதாக இருந்தாலும் அது மிக மிக போட்டி மிக்கதாகும். ஆனால், இப்போது இரண்டு ஆண்டு காலத்தில் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட எல்லோரும் முயற்சிப்பதால் உற்சாகம் அதிமாக உள்ளது. தற்போதைக்கும் சாத்தியமான அந்த முடிவுக்கும் இடையில் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது. நாம் ஒரு போட்டி அல்லது பகுதி நேரம் பற்றியே அவதானம் செலுத்துகிறோம். மிக வலுவான அணி ஒன்றாக இலங்கைக்கு எதிராக நாம் கடும் சவாலை எதிர்கொண்டிருக்கிறோம் என்பது எமக்குத் தெரியும் என்றும் கேன் வில்லியம்ஸன் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிக்கும் நியூசிலாந்து அணிக்கு கடும் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையிலும் இலங்கையில் தமக்கு கிடைத்து வரும் வரவேற்பு குறித்து கேன் வில்லியசன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். குறிப்பாக பயிற்சிப் போட்டியின்போது வில்லியம்சனின் பிறந்தநாளை இலங்கை ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியதோடு, அதில் வில்லியம்சனும் இணைந்து கொண்டார்

இது சிறப்பாக உள்ளது. எனது பிறந்த நாளில் பல கேக்குகள் கிடைத்ததோடு பிறந்த நாள் முடிந்து ஒரு சில தினங்களாக பிறந்த நாள் கேக்குகளை வெட்டினேன். எனவே நாம் கேக்குகளாலும் கொண்டாட்டங்களாவும் மகிழ்ச்சி அடைந்தோம். சமர்வில்லேவும் தமது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். வீரர்கள் இலங்கையில் இருக்கு காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர் என்று அவர் கூறினார்.     

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<