இங்கிலாந்தின் ஆஷஷ் குழாமில் இடம்பிடித்தார் ஜொப்ரா ஆர்ச்சர்

330

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறுகின்ற ஆஷஷ் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க ஒரு தொடராக அமைந்திருக்கிருக்கின்றது. 

71 ஆவது ஆஷஷ் டெஸ்ட் தொடரானது அடுத்த மாதம் முதலாம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள ஆஷஷ் கிண்ண டெஸ்ட் தொடரில் ஐந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. அவுஸ்திரேலிய அணியுடன் குறித்த ஆஷஷ் கிண்ண தொடர் நடைபெறுவதற்கு முன்னர் இங்கிலாந்து அணி கடந்த வருடம் புதிதாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அயர்லாந்து அணியுடன் ஒற்றை டெஸ்ட் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வோர்னர், ஸ்மித், பென்குரொப்ட் மீண்டும் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில்

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெறும்…….

இந்நிலையில் குறித்த தொடருக்காக நடப்பு சம்பியனான அவுஸ்திரேலிய அணியின் ஐந்து போட்டிகளுக்குமான முழுமையான குழாம் நேற்று (26) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (27) இங்கிலாந்து அணியினுடைய முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாம் மாத்திரம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழாமில் 14 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வெளியிடப்பட்டுள்ள குழாத்தின் அடிப்படையில் உலகக்கிண்ண தொடருக்கான இங்கிலாந்து அணியின் ஆரம்ப குழாமில் இடம்பெறாமல் பின்னர் மாற்றப்பட்ட குழாமில் ஒரு வேகப்பந்துவீச்சாளராக இணைந்து தனது வேகத்தின் மூலம் கிரிக்கெட் உலகில் முழு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த மேற்கிந்திய தீவுகளை பிறப்பிடமாக கொண்ட 24 வயது இளம் வீரர் ஜொப்ரா ஆர்ச்சர் முதல் முறையாக டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  

கடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னர் அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது ஒருநாள் அறிமுகம் பெற்று உலகக்கிண்ண தொடரில் சிறப்பாக பந்துவீசியதன் மூலம் தற்போது குறுகிய காலப்பகுதிக்குள் டெஸ்ட் குழாமிலும் இடம்பிடித்துள்ளார். 28 முதல் தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்ச்சர் 131 விக்கெட்டுக்களையும், துடுப்பாட்டத்தில் 1,003 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.  

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக தொடர்ந்து செயற்படும் வகையில் ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து அணியுடனான ஒற்றை டெஸ்ட் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த, இங்கிலாந்து அணியின் உலகக்கிண்ண வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியின் உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அயர்லாந்து அணியை வேகத்தால் வீழ்த்தியது இங்கிலாந்து

கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்தில்………

நேற்று (26) நிறைவுக்குவந்த அயர்லாந்து அணியுடனான ஒன்றை டெஸ்ட் போட்டியினுடாக டெஸ்ட் அறிமுகம் பெற்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் தொடர்ந்தும் விளையாடும் அடிப்படையில் ஆஷஷ் தொடருக்கான குழாமிலும் இடம்பெற்றுள்ளார். மேலும் ஆஷஷ் தொடருக்காக ஓய்வில் இருந்த விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் ஜொஸ் பட்லர் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து அணியுடனான டெஸ்ட்டில் கன்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஒலி ஸ்டோன் ஒரு இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி தன்னை நிரூபித்துக்காட்டியதன் மூலம் ஆஷஷ் தொடருக்கான குழாமிலும் இடம்பெற்றுள்ளார். இதேவேளை அயர்லாந்து அணியுடனான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஜெக் லீச் ஆஷஷ் குழாமில் தவறவிடப்பட்டுள்ளார். 

அத்துடன் முதல் முறையாக டெஸ்ட் குழாமில் இடம்பெற்றும் கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த லுவிஸ் க்ரேகெரி ஆஷஷ் குழாமில் தேர்வுக்குழுவினால் நழுவவிடப்பட்டுள்ளார். இதேவேளை அயர்லாந்து அணியுடனான குழாமில் இடம்பெற்று உபாதையால் குழாமிலிருந்து வெளியேறிய வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் உபாதையிலிருந்து மீளுவார் என்ற எதிர்பார்ப்பில் முதல் போட்டிக்கான குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இளம் வயதில் திடீர் ஓய்வை அறிவித்தார் மொஹமட் ஆமிர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள்……..

ஆஷஷ் தொடரின் முதல் போட்டிக்கான இங்கிலாந்து குழாம்

ஜோ ரூட் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜேம்ஸ் அண்டர்சன், ஜொப்ரா ஆர்ச்சர், ஜொனி பெயர்ஸ்டோ, ஸ்டுவர்ட் ப்ரோட், ரோரி பேன்ஸ், ஜொஸ் பட்லர், சாம் கரன், ஜோ டென்லி, ஜேசன் ரோய், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<