இலங்கை வளர்ந்துவரும் அணியுடனான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ரெய்னார்ட் வென் டொன்டரின் அபார சதத்தின் உதவியுடன் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி இன்று (25) பிரிட்டோரியாவில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற, இலங்கை வளர்ந்து வரும் அணியின் தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை எதிரணியினருக்கு வழங்கினார்.
இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடிய சிராஸ்
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் வீரர்களுக்கு எதிரான முதலாவது…..
அதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணிக்கு ஜேன்மன் மலான் மற்றும் வெண்டில் மெக்வெட்டு ஜோடி அரைச் சத இணைப்பாட்டமொன்றைப் பெற்றுக் கொண்டது.
இருவரும் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது, ஜேன்மன் மலான் 35 ஓட்டங்களுடன் ஜெஹான் டேனியலின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேற, வெண்டில் மெக்வெட்டு 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து அணித் தலைவர் ரெய்னார்ட்டுடன் ஜேசன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு 80 ஓட்டங்களை சேர்த்தனர். இதில் ஜேசன் ஸ்மித் 34 ஓட்டங்களை எடுத்து லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
தொடர்ந்து வந்த மெத்திவ் ப்ரிட்ஸ்கே 13 ஓட்டங்களை எடுத்து மீண்டும் ஒருமுறை லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ரெய்னார்ட்டுடன் ஜோடி சேர்ந்த சினெதெம்பா கெஸில் இலங்கை அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.
இறுதியில் ரொய்னார்ட்டின் சதம் மற்றும் சினெதெம்பாவின் அரைச் சதத்தின் உதவியோடு தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி, போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்சுக்காக 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை எடுத்தது.
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் சார்பில் முதல் தரப் போட்டிகளில் கன்னிச் சதமடித்து அசத்திய அணித் தலைவர் ரெய்னார்ட் வென் டொன்டர் 122 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க சினெதெம்பா கெஸில் 87 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுக்களையும், ஜெஹான் டேனியல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Janneman Malan | b Jehan Daniel | 35 | 38 | 5 | 0 | 92.11 |
Wandile Makwetu | c Minod Bhanuka b Lasith Embuldeniya | 25 | 53 | 2 | 1 | 47.17 |
Raynard van Tonder | c Charith Asalanka b Lasith Embuldeniya | 137 | 267 | 14 | 1 | 51.31 |
Jason Smith | b Lasith Embuldeniya | 34 | 62 | 1 | 1 | 54.84 |
Matthew Breetzke | c Minod Bhanuka b Lasith Embuldeniya | 13 | 27 | 0 | 0 | 48.15 |
Sinethemba Qeshile | c Charith Asalanka b Lasith Embuldeniya | 87 | 89 | 9 | 2 | 97.75 |
Dayyaan Galiem | c Minod Bhanuka b Lasith Embuldeniya | 8 | 16 | 2 | 0 | 50.00 |
Kyle Simmonds | c Hasitha Boyagoda b Lasith Embuldeniya | 73 | 57 | 8 | 3 | 128.07 |
M Jansen | c Minod Bhanuka b Lasith Embuldeniya | 3 | 19 | 0 | 0 | 15.79 |
Thando Ntini | not out | 14 | 29 | 1 | 0 | 48.28 |
Tladi Bokako | run out (Pathum Nissanka) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 12 (b 3 , lb 0 , nb 8, w 1, pen 0) |
Total | 441/10 (108.1 Overs, RR: 4.08) |
Fall of Wickets | 1-50 (13.1) Janneman Malan, 2-71 (17.2) Wandile Makwetu, 3-151 (41.5) Jason Smith, 4-173 (49.2) Matthew Breetzke, 5-326 (85.2) Sinethemba Qeshile, 6-342 (89.3) Dayyaan Galiem, 7-363 (93.4) Raynard van Tonder, 8-383 (99.2) M Jansen, 9-441 (107.6) Kyle Simmonds, 10-441 (108.1) Tladi Bokako, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mohamed Shiraz | 24 | 3 | 96 | 0 | 4.00 | |
Kalana Perera | 8 | 2 | 23 | 0 | 2.88 | |
Chamika Karunarathne | 16 | 3 | 61 | 0 | 3.81 | |
Jehan Daniel | 6 | 1 | 31 | 1 | 5.17 | |
Lasith Embuldeniya | 42 | 5 | 156 | 8 | 3.71 | |
Nishan Peiris | 10.1 | 0 | 57 | 0 | 5.64 | |
Charith Asalanka | 2 | 0 | 14 | 0 | 7.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Udara | c Sinethemba Qeshile b M Jansen | 8 | 14 | 2 | 0 | 57.14 |
Minod Bhanuka | c Sinethemba Qeshile b Thando Ntini | 56 | 65 | 8 | 1 | 86.15 |
Pathum Nissanka | lbw b Thando Ntini | 32 | 47 | 5 | 0 | 68.09 |
Charith Asalanka | c Raynard van Tonder b Thando Ntini | 18 | 26 | 2 | 0 | 69.23 |
Promod Maduwantha | c Sinethemba Qeshile b Thando Ntini | 111 | 236 | 9 | 0 | 47.03 |
Jehan Daniel | c Sinethemba Qeshile b M Jansen | 36 | 100 | 5 | 0 | 36.00 |
Kalana Perera | c Jason Smith b Dayyaan Galiem | 17 | 42 | 1 | 1 | 40.48 |
Chamika Karunarathne | c Wandile Makwetu b M Jansen | 53 | 97 | 4 | 0 | 54.64 |
Mohamed Shiraz | c Jason Smith b M Jansen | 23 | 50 | 3 | 0 | 46.00 |
Nishan Peiris | not out | 4 | 8 | 1 | 0 | 50.00 |
Lasith Embuldeniya | c Raynard van Tonder b M Jansen | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 30 (b 12 , lb 4 , nb 11, w 3, pen 0) |
Total | 388/10 (112.5 Overs, RR: 3.44) |
Fall of Wickets | 1-13 (3.3) Lahiru Udara, 2-88 (19.2) Pathum Nissanka, 3-118 (23.4) Minod Bhanuka, 4-128 (25.6) Charith Asalanka, 5-217 (59.4) Jehan Daniel, 6-250 (74.3) Kalana Perera, 7-333 (99.2) Promod Maduwantha, 8-379 (110.1) Chamika Karunarathne, 9-388 (112.2) Mohamed Shiraz, 10-388 (112.5) Lasith Embuldeniya, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tladi Bokako | 16 | 1 | 53 | 0 | 3.31 | |
M Jansen | 19.5 | 5 | 69 | 5 | 3.54 | |
Dayyaan Galiem | 21 | 2 | 72 | 1 | 3.43 | |
Thando Ntini | 21 | 5 | 76 | 4 | 3.62 | |
Kyle Simmonds | 29 | 5 | 82 | 0 | 2.83 | |
Jason Smith | 6 | 1 | 21 | 0 | 3.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Janneman Malan | c Jehan Daniel b Kalana Perera | 84 | 162 | 6 | 0 | 51.85 |
Wandile Makwetu | lbw b Lasith Embuldeniya | 26 | 63 | 2 | 0 | 41.27 |
Raynard van Tonder | c Lahiru Udara b Lasith Embuldeniya | 31 | 80 | 3 | 0 | 38.75 |
Jason Smith | c Lahiru Udara b Promod Maduwantha | 62 | 130 | 3 | 3 | 47.69 |
Matthew Breetzke | not out | 38 | 89 | 3 | 0 | 42.70 |
Sinethemba Qeshile | c Jehan Daniel b Promod Maduwantha | 1 | 13 | 0 | 0 | 7.69 |
Dayyaan Galiem | not out | 3 | 17 | 0 | 0 | 17.65 |
Extras | 15 (b 1 , lb 0 , nb 14, w 0, pen 0) |
Total | 260/5 (90 Overs, RR: 2.89) |
Fall of Wickets | 1-46 (15.5) Wandile Makwetu, 2-129 (41.4) Raynard van Tonder, 3-185 (59.5) Janneman Malan, 4-245 (80.5) Jason Smith, 5-251 (84.5) Sinethemba Qeshile, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kalana Perera | 15 | 3 | 43 | 1 | 2.87 | |
Lasith Embuldeniya | 34 | 5 | 99 | 2 | 2.91 | |
Mohamed Shiraz | 5 | 1 | 17 | 0 | 3.40 | |
Chamika Karunarathne | 11 | 3 | 42 | 0 | 3.82 | |
Jehan Daniel | 4 | 2 | 7 | 0 | 1.75 | |
Nishan Peiris | 14 | 4 | 31 | 0 | 2.21 | |
Promod Maduwantha | 7 | 0 | 20 | 2 | 2.86 |